ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்எஸ்ஆர் பணி தொடக்கம்: 2027 ஜனவரி 21-ல் இறுதிப் பட்டியல்

ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்எஸ்ஆர் பணி தொடக்கம்: 2027 ஜனவரி 21-ல் இறுதிப் பட்டியல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசம், சண்​டிகர் உள்​ளிட்ட மேலும் 6 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்டியல் சிறப்பு சுருக்​கத் திருத்​தப் பணி (எஸ்எஸ்ஆர்) மேற்கொள்ளப்​படும் என தேர்தல் ஆணையம் அறி​வித்​துள்​ளது.

புதிய வாக்​காளர்​கள் மற்​றும் எஸ்​ஐஆர்​-ல் விடு​பட்​ட​வர்​களை சேர்ப்​ப​தற்​காக, தமிழ்​நாடு உட்பட 17 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு சுருக்​கத் திருத்​தம் (எஸ்​எஸ்​ஆர்) மேற்​கொள்​ளப்​படும் என கடந்த அக்டோபர் 15-ம் தேதி தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது.

இந்​நிலை​யில், 2-ம் கட்​ட​மாக அருணாச்சல பிரதேசம், மிசோரம், ஒடி​சா, சிக்​கிம் ஆகிய 4 மாநிலங்​கள் மற்​றும் சண்​டிகர், தாத்ரா நாகர் ஹவேலி & டாமன் - டையூ, ஆகிய 2 யூனியன் பிரதேசங்களில் எஸ்​எஸ்​ஆர் பணி நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்ள அட்​ட​வணை​யின்​படி, இந்​தப் பணி​கள் நவம்​பர் 20-ம் தேதி முடிவடை​யும். வரைவு வாக்​காளர் பட்​டியல் நவம்​பர் 30-ம் தேதி வெளி​யிடப்​படும். டிசம்​பர் 30-க்​குள் வாக்​காளர்​கள் தங்​கள் ஆட்​சேபங்​களை தெரிவிக்​கலாம். இதன் அடிப்​படை​யில் இறு​திப் பட்​டியல் 2027 ஜனவரி 21-ம் தேதி வெளியிடத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இப்பணியை வெற்​றிகர​மாக முடிக்​க சம்​பந்​தப்​பட்ட மாநில தலை​மைச் செய​லா​ளர்​களுக்​கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்எஸ்ஆர் பணி தொடக்கம்: 2027 ஜனவரி 21-ல் இறுதிப் பட்டியல்
‘வெற்றி வீடு’ திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.3,500 கோடி ஒதுக்கீடு: நடப்பாண்டில் ஊரகப் பகுதிகளில் 70,000 வீடுகள்

X