கரப்​பான்​பூச்சி ஜனதாவில் பிளவு: ‘சிஜேபி - டெ​மாக்​ரடிக்’ தொடக்கம்

கரப்​பான்​பூச்சி ஜனதாவில் பிளவு: ‘சிஜேபி - டெ​மாக்​ரடிக்’ தொடக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அமைப்​பைச் சேர்ந்த மனிஷ் பிரம்​பட், “கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி - டெமாக்​ரட்​டிக்” (சிஜேபி-டி) என்ற பெயரில் நேற்று புதிய பிரி​வைத் தொடங்கி​னார்.

இதுகுறித்து பிரம்​பட் கூறி​யுள்​ள​தாவது: சிஜேபி இளைஞர் இயக்கமாகத் தொடங்​கப்​பட்​டது. ஆனால், நிறு​வன​ரான அபிஜித் திப்கே அக்​கட்​சியை கேஜ்ரி​வாலின் விருப்​பப்​படி செயல்​படும் கைப்​பாவை​யாக மாற்​றி​விட்​டார். களத்​தில் உழைத்த தொண்டர்களைப் புறந்​தள்​ளி​விட்டு தன்​னிச்​சை​யாகச் செயல்படுகிறார்.

குறிப்​பாக, போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை திப்கே புறக்கணித்து​விட்​டு, இளைஞர் இயக்​கத்தை ஆம் ஆத்மி கட்சியின் பின்​னணி​யைக் கொண்​ட​வர்​கள் ஆதிக்​கம் செலுத்​து​வதற்கு வழி​வகுத்​துள்​ளார். மேலும், பாஜகவை எதிர்ப்​ப​தில் மட்டுமே சிஜேபி ஆர்​வம் காட்டி வரு​கிறது. எனவே புதிய அமைப்பை தொடங்கியுள்ளோம். இவ்​வாறு பிரம்​பட் கூறியுள்ளார்.

கரப்​பான்​பூச்சி ஜனதாவில் பிளவு: ‘சிஜேபி - டெ​மாக்​ரடிக்’ தொடக்கம்
சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழி தமிழ்: பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in