பிரதமர் பதவியை மறுத்துவிட்டு சூப்பர் பிரதமராக செயல்பட்டார் சோனியா காந்தி: பாஜக செய்தித் தொடர்​பாளர் சுதான்ஷு திரிவேதி விமர்சனம்

பிரதமர் பதவியை மறுத்துவிட்டு சூப்பர் பிரதமராக செயல்பட்டார் சோனியா காந்தி: பாஜக செய்தித் தொடர்​பாளர் சுதான்ஷு திரிவேதி விமர்சனம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி எழு​திய `பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற சுயசரிதை புத்​தகம் நேற்று முன்​தினம் வெளி​யானது. 544 பக்​கங்​களை கொண்ட இந்த புத்தகத்​தில் 2004-ல் பிரதமர் பதவியை மறுத்​தது, அவசர நிலையை ராஜீவ் காந்தி எதிர்த்​தது, மேனகா காந்​தி​யுட​னான கருத்​து​வேறு​பாடு என பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து சோனியா காந்தி மனம் திறந்​துள்​ளார்.

இதுகுறித்து டெல்​லி​யில் உள்ள பாஜக தலை​மையகத்​தில் செய்தித் தொடர்​பாளர் சுதான்ஷு திரிவேதி கூறிய​தாவது: சோனியா காந்தி செய்​தது எவ்​வளவு பெரிய தியாகம். பிரதமர் பதவியை விட்​டு​விட்​டு, சூப்​பர் பிரதம​ராக ஆனார். பிரதமர் பதவியை மறுத்​து​விட்​டு, அமைச்​சரவை அந்​தஸ்து கொண்ட பதவியை ஏற்​றுக்​கொண்ட தியாகத்​தின் உதா​ரணம் உலகிலேயே எங்​கும் கிடையாது. என்​ஏசி தலை​வர் பதவி அமைச்​சரவை அந்தஸ்​துடன் இருந்​தது மட்​டும் இன்றி லாபம் தரும் பதவி​யாக​வும் இருந்​தது.

இதுகுறித்து சர்ச்சை எழுந்​த​போது, சோனியா காந்தி ராஜி​னாமா செய்ய வேண்​டிய நிலை ஏற்​பட்​டது. பின்​னர் அவர் மீண்​டும் வரு​வதற்கு முன்​பாக, மன்​மோகன் சிங் தலை​மையி​லான அரசு விதி​முறை​களை மாற்​றி, என்​ஏசி தலை​வர் பதவியை லாபகர​மான பதவி பட்​டியலில் இருந்து நீக்​கியது. அவசரநிலை அமல்​படுத்​தப்​பட்​டதற்கு தனது மைத்​துன​ரான சஞ்​சய் காந்​தியே காரணம் என்றும், ராஜீவ் காந்தி அதற்கு எதி​ராக இருந்​த​தாக​வும் சோனி​யா காந்தி தனது சுயசரிதை​யில் கூறி​யிருப்​பதை ஏற்​க​முடி​யாது.

ராஜீவ் காந்தி பல சந்​தர்ப்​பங்​களில் அவசரநிலையை ஆதரித்துள்ளார். சோனியா காந்தி தனது நூலில் மேனகா காந்தியுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு​களை விவரித்​திருப்​பது, அவசரநிலை பற்​றிய கதையை​விட, ஒரு இந்​திய மரு​மகளுக்​கும் வெளி​நாட்டு மூத்த மரு​மகளுக்​கும் இடையி​லான ஆழமான பகைமை​யின் கதை போல தோன்​றுகிறது. அதில் குற்றச்சாட்டுகளின் பரி​மாற்றமே அதி​கம்​ காணப்​படு​கிறது. இவ்வாறு அவர்​ கூறி​னார்​.

பிரதமர் பதவியை மறுத்துவிட்டு சூப்பர் பிரதமராக செயல்பட்டார் சோனியா காந்தி: பாஜக செய்தித் தொடர்​பாளர் சுதான்ஷு திரிவேதி விமர்சனம்
அவசரநிலை முதல் அரசியல் நுழைவு வரை: சுயசரிதை நூலில் சோனியா காந்தி விவரிப்பு

X