டெல்லியில் இருந்து புறப்படத் தயாரான சுவிஸ் ஏர்வேஸ் விமானத்தின் இன்ஜின் தீப்பிடித்து 6 பேர் காயம்

டெல்லியில் இருந்து புறப்படத் தயாரான சுவிஸ் ஏர்வேஸ் விமானத்தின் இன்ஜின் தீப்பிடித்து 6 பேர் காயம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி விமான நிலை​யத்​தில் இருந்து சுவிஸ் ஏர்வேஸ் விமானம் புறப்பட முயன்ற போது, அதன் இன்ஜின் தீப்​பிடித்​த​தில் 6 பயணி​கள் காயமடைந்​தனர்.

டெல்லி விமான நிலை​யத்​தில் இருந்து சுவிஸ் ஏர்​வேஸ் நிறு​வனத்​துக்கு சொந்​த​மான ஏர்​பஸ் ஏ330 ரக விமானம், நேற்று அதி​காலை சுவிட்​சர்​லாந்​தின் சூரிச் நகருக்கு புறப்படத் தயா​ரானது. ஓடு​தளத்​தில் வேக​மாகச் செல்​லத் தொடங்​கிய போது, அந்த விமானத்​தின் ஒரு இன்​ஜின் செயலிழந்து தீப்​பிடித்​தது.

இதுகுறித்து சுவிஸ் ஏர்​வேஸ் நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: டெல்​லி​யில் இருந்து சூரிச் நகருக்கு புறப்​படத் தயா​ரான விமானத்​தில் 228 பயணி​கள் மற்​றும் 4 குழந்​தைகள் இருந்​தனர். இந்​திய நேரப்​படி அதி​காலை 1 மணிக்கு மேல், விமானம் கிளம்ப முயன்ற போது இன்​ஜினில் சிக்​கல் ஏற்​பட்​டது. இதை அறிந்த விமான ஊழியர்​கள் உடனடி​யாக விமானத்தை நிறுத்​தினர்.

பின்​னர் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக விமானத்தில் இருந்த அனைத்து பயணி​களும் அவசர கால சறுக்​குப் பாதைகள் மூலம் ஓடு​தளத்​திலேயே வெளியேற்பட்​டனர். இதில் காயமடைந்த 6 பயணி​களுக்கு மருத்​து​வச் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. ஊழியர்களுக்கு எந்​தப் பாதிப்​பும் இல்​லை. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

டெல்லியில் இருந்து புறப்படத் தயாரான சுவிஸ் ஏர்வேஸ் விமானத்தின் இன்ஜின் தீப்பிடித்து 6 பேர் காயம்
Bulbbul: கொலையும் செய்வாள் புல்புல் | திரை தேவதைகள் 15

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in