“நரவனே நினைவுக் குறிப்புகளை மேற்கோள் காட்ட ராகுலை அனுமதித்திருக்க வேண்டும்” - சரத் பவார்

“நரவனே நினைவுக் குறிப்புகளை மேற்கோள் காட்ட ராகுலை அனுமதித்திருக்க வேண்டும்” - சரத் பவார்
Updated on
1 min read

பாராமதி: மக்​களவை​யில் குடியரசுத் தலை​வர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீது கடந்த திங்​கள் ​கிழமை விவாதம் நடை​பெற்​றது.

அப்​போது மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, முன்னாள் ராணுவ தளபதி எம்​.எம். நரவனே​வின் வெளியிடப்படாத "நினை​வுக் குறிப்​பு​களில்" இருந்து மேற்​கோள் காட்ட முயன்​றார். அதற்கு மத்​திய அமைச்​சர்​கள் ராஜ்​நாத் சிங், அமித் ஷா உள்​ளிட்​டோர் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

இதுகுறித்து தேசி​ய​வாத காங்​கிரஸ் (பவார்) தலை​வர் சரத் பவார் பாராம​தி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறும்​போது, “பட்​ஜெட் கூட்​டத்​தொடரின் ​போது, லடாக் எல்​லை​யில் சீன ராணுவம் ஊடுருவியது குறித்து மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பேச முயன்​றார்.

அப்​போது, முன்​னாள் ராணுவ தளபதி எம்​.எம். நரவனே​வின் வெளியிடப்​ப​டாத "நினை​வுக் குறிப்​பு​களில்" இருந்து மேற்​கோள் காட்ட முயன்​றார். ஆனால் அவருக்கு அனு​மதி வழங்கப்படவில்லை. அந்​தப் புத்​தகம் இன்​னும் வெளியாகவில்லை என்​றாலும், காந்தி அதன் நகலை வைத்திருந்தார். எனவே அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்​க வேண்​டும்​" என்​றார்​.

“நரவனே நினைவுக் குறிப்புகளை மேற்கோள் காட்ட ராகுலை அனுமதித்திருக்க வேண்டும்” - சரத் பவார்
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் காலமானார்: தமிழக முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in