மேலாடையை களைந்து போராட்டம்: 4 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்

மேலாடையை களைந்து போராட்டம்: 4 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி ஏஐ மாநாட்டில் மேலாடையை களைந்து போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. ஏஐ மாநாட்டு அரங்கில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க வர்த்தக உடன்பாட்டுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். சர்வதேச அளவில் நாட்டை அவமதிக்கும் ஆழமான சதி உள்ளதால் அவர்களை விசாரிக்க 5 நாட்கள் அனுமதிக்க வேண்டும் என்று போலீஸார் கோரினர். அதை ஏற்ற நீதிமன்றம் 4 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேலாடையை களைந்து போராட்டம்: 4 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரி விவகாரத்தை ஆய்வு செய்கிறது இந்தியா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in