பிரயாக்ராஜ் மகர மேளாவில் உத்தராகண்ட் ஜோதிஷ்வர் மடத்தின் சங்கராச்சாரியார் தர்ணா

சங்​க​ராச்​சா​ரி​யார் சுவாமி அவி​முக்​தேஷ்வ​ரானந்தா

சங்​க​ராச்​சா​ரி​யார் சுவாமி அவி​முக்​தேஷ்வ​ரானந்தா

Updated on
1 min read

புதுடெல்லி: உத்​தரபிரதேசம் பிர​யாக்​ராஜ் நகரின் திரிவேணி சங்​கமம் பகுதியில் மகர மேளா நடை​பெற்று வரு​கிறது.

கடந்த 17-ம் தேதி உத்​த​ராகண்ட் மாநிலம், சமோலி மாவட்​டத்​தில் உள்ள ஜோதிஷ்வர் மடத்​தின் சங்​க​ராச்​சா​ரி​யார் சுவாமி அவி​முக்​தேஷ்வ​ரானந்தா தனது சீடர்​கள் மற்​றும் ஆதரவாளர்​களு​டன் கங்கை நதி​யில் புனித நீராட பல்​லக்​கில் வந்​தார். அவரை தடுத்து நிறுத்​திய உ.பி. காவல் துறை, அவி​முக்​தேஷ்வர் அங்கு நீராட அனு​மதி மறுத்​தது.

அப்​போது உ.பி. போலீ​ஸார் மற்​றும் அவி​முக்​தேஷ்வர் ஆதரவாளர்​கள் இடையே மோதல் ஏற்பட்​டது. இதையடுத்து அவி​முக்தேஷ்வர், மேளா மற்​றும் உள்​ளூர் நிர்​வாகத்​துக்கு எதி​ராக தர்​ணா​வில் அமர்ந்​தார்.

இது தொடர்​பாக உ.பி. அரசின் மேளா நிர்​வாகம் அவருக்கு 2 நோட்​டீஸ்​களை அனுப்பி விளக்​கம் கேட்​டது. மேளா சம்​பவம் குறித்து ஒரு மேடை​யில் பேசிய முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், ‘காலாநேமி (ரா​மாயணத்​தின் ராட்​சசன்)’ என அவி​முக்​தேஷ்வரை விமர்​சனம் செய்​தார். இது துறவி சமூகத்​தினர் இடையே மேலும் கோபத்தை தூண்​டியது.

இந்​தப் பிரச்​சினை​யில் எதிர்க்கட்​சிகளான சமாஜ்​வா​தி​யும் காங்​கிரஸும் உ.பி. அரசை விமர்​சனம் செய்​தன.

இதுகுறித்து துணை முதல்​வர் கேசவ் பிர​சாத் மவுரியா கூறும்​போது, “சங்​க​ராச்​சா​ரி​யார் பாதங்​களை நாங்​கள் வணங்​குகிறோம். அவர் தனது புனித நீராடலை முடிக்க வேண்​டும். துறவி​களை அவம​தித்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுப்​போம். இந்த விஷ​யத்தை இத்​துடன் முடித்​துக்​கொள்ள வேண்​டும்” என கேட்​டுக் கொண்​டார்.

எனினும், நேற்று முன்​தினம் வசந்த பஞ்​சமி புனித நீராடல் சடங்​கை​யும் அவி​முக்​தேஷ்வர் முடிக்க மறுத்து விட்​டார். தன்னை அவம​தித்த அரசு மன்​னிப்பு கேட்​பதுடன், அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்​கும் வரை போராட்​டம் தொடரும் என்​றார்.

ஜோதிஷ்வர் மடத்​தின் சங்கராச்​சா​ரி​யா​ரான பீடாதீஷ்வரர் சுவாமி சொரூ​பானந்த் சரஸ்வதி, கடந்த 2022, செப்​டம்​பரில் மறைந்​தார். இதற்கு மறு​நாள் மடத்​தின் மூத்த துற​வி​யான அவிமுக்​தேஷ்வர், சங்​க​ராச்​சாரியாராக அமர்ந்​தார்.

இதற்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வழக்​கில் சங்​க​ராச்​சா​ரி​யார் பட்​டத்​துக்கு 2022 அக்​டோபரில் தடை விதிக்​கப்​பட்டு வழக்கு தொடரு​கிறது. எனினும் சங்​கா​ராச்​சா​ரியர்​கள் விவ​காரத்​தில் அரசுகளும், உச்ச நீதி​மன்​ற​மும் தலை​யிட முடி​யாது என அவி​முக்​தேஷ்வர் கூறி வரு​கிறார்.

மேலும் அவி​முக்​தேஷ்வர் தொடர்ந்து மத்​திய மற்​றும் உ.பி. பாஜக அரசுகளுக்கு எதி​ராக பேசி வரு​கிறார். காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்​தி​யை​யும் அவர் விமர்​சனம் செய்​கிறார். இதனால் அவி​முக்​தேஷ்வருக்​கு நெருக்​கடிகள்​ அளிக்​கப்​படுவதாகப்​ புகார்​களும்​ உள்​ளன.

<div class="paragraphs"><p>சங்​க​ராச்​சா​ரி​யார் சுவாமி அவி​முக்​தேஷ்வ​ரானந்தா</p></div>
ராஜஸ்தான் சிறையில் பூத்த காதல்: பரோலில் வந்து திருமணம் செய்த ஜோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in