பாலியல் வன்கொடுமை வழக்கு: கேரள எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் ஜாமீன் மனு நிராகரிப்பு!

ராகுல் மம்கூடத்தில்

ராகுல் மம்கூடத்தில்

Updated on
1 min read

திருவனந்தபுரம்: வெளிநாடு வாழ் இந்தியப் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூடத்திலுக்கு திருவல்லாவில் உள்ள முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று (ஜன.17) ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

ராகுல் மம்கூடத்திலின் ஜாமீன் மனு மீதான விரிவான விசாரணைக்குப் பிறகு, நீதிபதி அருந்ததி திலீப் அந்த மனுவை தள்ளுபடி செய்தார். ராகுல் தனது ஜாமீன் மனுவில், அந்தப் பெண்ணுடனான தனது உறவு பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது என்றும், தனது கைது நடவடிக்கையின்போது முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ரகசியத் தன்மையைப் பேணுவதற்காக, உதவி அரசு வழக்கறிஞரின் கோரிக்கையின் பேரில், நீதிமன்ற நடவடிக்கைகள் மூடிய அறைக்குள் நடத்தப்பட்டன. ஜனவரி 11 அன்று பாலக்காட்டில் கைது செய்யப்பட்ட மம்கூடத்தில், இனி ஜாமீன் கோரி அமர்வு நீதிமன்றத்தை அணுகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மனு திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பின்னணி என்ன? - கேரள மாநிலம் பாலக்​காடு காங்கிரஸ் எம்​எல்​ஏ​வாக இருப்​பவர் ராகுல் மம்​கூடத்​தில். மாநில இளைஞர் காங்​கிரஸ் தலை​வர் பதவியும் வகித்த இவர் மீது பாலியல் புகார்​கள் கூறப்​பட்​டன. இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பாலியல் புகார் வழக்கில் ராகுல் தலைமறைவானார்.

இதையடுத்து, எம்​எல்ஏ ராகுல் மம்​கூடத்​தில் தன்னை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக​வும், நிதி ரீதி​யாக சுரண்​டு​வ​தாக​வும் ஒரு பெண் இ-மெ​யில் மூலம் கேரள முதல்​வருக்கு புகார் அனுப்பினார். இது ராகுல் மீதான 3-வது பாலியல் புகார் ஆகும். இது குறித்து விசா​ரணை நடத்து​மாறு, மாநில போலீஸ் டிஜிபிக்கு அரசு உத்தரவிட்டது.

அதன்​பேரில் ராகுல் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அதி​காரி பூங்​குழலி தலை​மை​யில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்​பட்​டது. இந்​தக் குழு​வினர் பாலக்காட்​டில் ஜனவரி 11ஆம் தேதி அவரை கைது செய்​து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதி​மன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

<div class="paragraphs"><p>ராகுல் மம்கூடத்தில்</p></div>
இந்தூரில் அசுத்த குடிநீரால் பாதிக்கப்பட்டோர் உடன் ராகுல் காந்தி சந்திப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in