ஆந்திராவில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு: திருமலையில் பக்தர்கள் பாதிப்பு

விற்பனையாளர்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை
ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று பெட்ரோல், டீசலுக்காக காத்திருக்கும் வாகனங்கள்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று பெட்ரோல், டீசலுக்காக காத்திருக்கும் வாகனங்கள்.

Updated on
2 min read

திருமலை: ஆந்​திர மாநிலத்​தில் திடீரென பெட்​ரோல், டீசலுக்கு ஏற்​பட்​டுள்ள தட்​டுப்​பாட்​டால் பொது​மக்​கள் மிக​வும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். அதி​லும் குறிப்​பாக பல்​வேறு வெளி​மாநிலங்​களில் இருந்து திரு​மலைக்கு வந்த பக்​தர்​கள் தங்​களின் கார், வேன்​களுக்கு போதிய டீசல், பெட்​ரோல் கிடைக்​காமல் பெரும் அவதிப்​படு​கின்​றனர். இதையடுத்​து, டீலர்​களுக்கு முதல்வர் சந்​திர​பாபு நாயுடு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

ஆந்​திர மாநிலம் முழு​வதும் திடீரென பெட்​ரோல், டீசலுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதற்கு பல காரணங்​கள் கூறப்​படு​கின்​றன. கடப்​பா, விஜய​வாடா ஆகிய இடங்​களில் உள்ள ஆயில் நிறு​வனங்​களில் ஏற்​பட்​டுள்ள தட்​டுப்​பா​ட்டால், மாநிலம் முழு​வதும் பெட்​ரோல், டீசல் கிடைக்க வில்லை என கூறப்​படு​கிறது. ‘இதெல்​லாம் உண்மை இல்லை. பெட்​ரோல், டீசல் பதுக்​கப்​படு​கிறது. இதன் மூலம் கள்ள சந்​தை​யில் அதிக விலைக்கு விற்​கலாமென டீலர்​கள் முடி​வெடுத்து வேண்​டுமென்றே மாநிலம் முழு​வதும் பற்​றாக்​குறையை ஏற்​படுத்தி உள்​ளனர்’ என்ற தகவலும் வெளி​யாகி உள்​ளது.

ஆந்​திர மாநிலம் முழு​வதும் சுமார் 4,150 பெட்​ரோல் பங்​க்கு​கள் உள்​ளன. இதில் தற்​போது 70 சதவீதத்​துக்​கும் மேலான பங்​க்கு​களில் ‘நோ ஸ்டாக்’ அறி​விப்பு பலகைகள்தான் காணப்​படு​கின்​றன. அண்டை மாநிலங்​களான தெலங்​கா​னா, தமிழகம், கர்​நாடகா உள்​ளிட்ட மாநிலங்​களில் இந்த பிரச்​சினை இல்​லை. ஆனால் திடீரென ஆந்​தி​ரா​வில் மட்​டும் இப்​பிரச்​சினை தலை​தூக்க காரணம் என்ன என்​பது குறித்து மாவட்ட ஆட்​சி​யர்​கள், டீலர்​களு​டன் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்​தி​னார்.

பொது​மக்​கள், வியா​பாரி​கள், விவ​சா​யிகள், மாணவர்​கள், அரசு மற்​றும் தனி​யார் ஊழியர்​கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்​கப்​படு​வர் என்​பதுடன் சுற்​றுலா துறை​யும் பாதிப்​படை​யும் என்​ப​தால் 24 மணி நேரத்​துக்​குள் பெட்​ரோல், டீசல் பிரச்​சினை தீர்க்​கப்பட வேண்​டும் என ஆட்​சி​யர்​களுக்கு அவர் உத்​தர​விட்​டுள்​ளார்.

ஒவ்​வொரு 3 மணி நேரத்​துக்கு ஒரு​முறை இதுதொடர்​பாக மாநிலம் தழு​விய அறிக்​கையை கொடுக்க வேண்​டும் என்​றும் அறிவுறுத்தியுள்​ளார். நேற்று மாலை வரை​யிலும்கூட திருப்​ப​தி, சித்​தூர், நெல்​லூர், குண்​டூர், கடப்​பா, விஜய​வா​டா, விசாகப்​பட்​டினம், கோதாவரி மாவட்​டங்​கள் என ஆந்​திரா முழு​வதும் எரிபொருள் பிரச்​சினை தீர்ந்​த​பாடில்​லை.

பெட்​ரோல், டீசல் வந்​ததும் குறிப்​பிட்ட பெட்​ரோல் பங்​க்கு​கள் முன்பு வாக​னங்​களுடன் பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருக்க தொடங்கி விடு​கின்​றனர். இதனால் சில மணி நேரங்​களி​லேயே பெட்​ரோல், டீசல் விற்றுத் தீர்ந்து விடு​கிறது. திரு​மலை​யிலும் இதே நிலைமை உள்​ள​தால், வெளியூர்​களில் இருந்து கார், வேன்​களில் வரும் பக்​தர்​கள் மிக​வும் அவதிக்கு ஆளாகி உள்​ளனர்.

திரு​மலை​யில் உள்ள 2 பெட்​ரோல் பங்​க்கு​களி​லும் நேற்று மதி​யம் முதல் பெட்​ரோல், டீசல் இல்லை எனும் அறி​விப்பு பலகைகள் வைக்​கப்​பட்​ட​தால் வெகு தூரம் செல்​லும் வாகன ஓட்​டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்​பட்​டுள்​ளது. ​திரு​மலை​யில் தொடர்ந்து தங்​கு​வதற்கு அறை​களும் கிடைக்​காமல், பெட்​ரோல், டீசலுக்​கும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால் கீழே இறங்கி செல்​ல​வும் முடி​யாமல் வாகன ஓட்​டிகள் தவித்து வரு​கின்​றனர். எனவே, உடனடி​யாக இந்த பிரச்​சினைக்கு தீர்வு காண வேண்​டும் என பக்​தர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் ராணுவம் மூடிய​தால், உலகின் பல்​வேறு நாடு​களி​லும் பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு உள்​ளிட்​ட​வற்​றுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. எனினும், பின்​னர் படிப்​படி​யாக நிலைமை சீரடைந்து வரு​கிறது.

பெட்​ரோல், டீசல் மற்​றும் எல்​பிஜி ஆகிய​வற்​றின் இருப்பை உறுதி செய்ய மத்​திய அரசு அனைத்து முயற்​சிகளை​யும் மேற்​கொண்டு வரு​வ​தாக மத்​திய பெட்​ரோலிய அமைச்​சகம் விளக்​கம் அளித்​துள்​ளது. அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் சட்​டம், 1955 மற்​றும் எல்​பிஜி கட்​டுப்​பாட்டு ஆணை, 2000 ஆகிய​வற்​றின் கீழ், விநி​யோகத்​தைக் கண்​காணிக்​க​வும், பதுக்​கல் மற்​றும் கள்​ளச் சந்​தைக்கு எதி​ராக நடவடிக்கை எடுக்​க​வும் மாநில அரசுகளுக்கு அதி​காரம் அளிக்​கப்​பட்​டுள்​ளது என்​றும் பெட்​ரோலிய அமைச்​சகம் தெரி​வித்​திருப்​ப​து குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று பெட்ரோல், டீசலுக்காக காத்திருக்கும் வாகனங்கள்.</p></div>
ஐபிஎல் தொடரில் 9,000 ரன்களை கடந்த முதல் வீரர்: விராட் கோலி சாதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in