“உங்கள் குழந்தைகளை கிராமப் பள்ளிக்கு அனுப்புங்கள்” - அரசியல்வாதிகளுக்கு அபிஜித் திப்கே வலியுறுத்தல்

‘அரசுப் பள்ளி மாணவர்களின் நிலையை அறிவீர்’
“உங்கள் குழந்தைகளை கிராமப் பள்ளிக்கு அனுப்புங்கள்” -  அரசியல்வாதிகளுக்கு அபிஜித் திப்கே வலியுறுத்தல்
Updated on
1 min read

ஹிங்கோலி: மகா​ராஷ்டிர மாநிலம், ஹிங்​கோலி மாவட்​டத்​தில் உள்ள தனது சொந்த கிராமத்​தில் இருந்து ‘பள்​ளியைச் சரி செய்யுங்​கள்’ என்ற பிர​ச்சா​ரத்​தை, கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் திப்கே கடந்த வாரம் தொடங்​கி​னார். கிராமப்​புற மற்​றும் பழங்​குடி​யினப் பள்​ளி​களின் நிலை​மையை மேம்​படுத்​து​வதே இந்​தப் பிரச்​சா​ரத்​தின் நோக்​கம் ஆகும்.

இந்​நிலை​யில், ஹிங்​கோலி​யில் பள்​ளி​கள் தொடர்​பான பிரச்​சினை​களை வலி​யுறுத்தி நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தின் போது, அபிஜித் திப்கே செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அமைச்​சர்​கள், எம்​எல்​ஏ-க்​கள், எம்​பி-க்​கள் தங்​களது குழந்​தைகளை ஒரு நாள் கிராமப்​புறப் பள்​ளிக்கு அனுப்ப வேண்​டும்.

கிராமத்து குழந்​தைகளைப் போலவே அவர்​களை​யும் நடந்​து பள்​ளிக்​குச் செல்​லும்​படி செய்ய வேண்​டும். அப்​போது​தான், அந்​தக் குழந்​தைகள் எதிர்​கொள்​ளும் சிரமங்​களை அவர்​கள் புரிந்து கொள்​வார்​கள்.

பழங்​குடி​யின மற்​றும் ஏழை சமூகங்​களைச் சேர்ந்த குழந்​தைகளின் பாது​காப்​பை​யும், கண்​ணி​யத்​தை​யும் அரசு உறுதி செய்ய வேண்​டும். ஒரு பழங்​குடி​யினக் குழந்​தை​யின் உயிருக்​கும், அமைச்​சரின் குழந்​தை​யின் உயிருக்​கும் ஒரே மதிப்​பு​தான் இருக்க வேண்​டும். அந்​தக் குழந்​தை​யின் உயிர் எந்த வகை​யிலும் குறைந்த மதிப்​புடையது அல்ல.

மக்​கள் ஒரு​வருக்​கொரு​வர் சண்​டை​யிடும் வகை​யில் தூண்​டப்​படு​கிறார்​கள். அதன்​மூலம், ஆட்​சி​யில் இருப்​பவர்​கள் பயனடைகிறார்​கள். பாதிக்​கப்​படு​வது நாம்​தான். கல்வி கிடைக்​காதது நமது குழந்​தைகளுக்​குத்​தான். அரசி​யல் தலை​வர்​களின் குழந்​தைகள் வெளி​நாடு​களில்​கூட கல்வி வாய்ப்​பு​களைப் பெறும் நிலை​யில், கிராமப்​புறக் குழந்​தைகள் அடிப்​படைப் பள்ளி வசதி​களுக்​காக போ​ராட வேண்​டி உள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்.​

“உங்கள் குழந்தைகளை கிராமப் பள்ளிக்கு அனுப்புங்கள்” -  அரசியல்வாதிகளுக்கு அபிஜித் திப்கே வலியுறுத்தல்
70 ஆண்டுகளாக நிறைவேறாத நந்தன் கால்வாய் திட்டம்: பேரவையில் திமுக - அதிமுக காரசார விவாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in