தலைநகர் டெல்லி​யில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்

தலைநகர் டெல்லி​யில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: தலைநகர் டெல்லி​யில் அமைந்​துள்ள பாகிஸ்தான் தூதரகத்​தின் பாது​காப்பு தடுப்​பு​கள் நேற்று ஜேசிபி இயந்​திரம் மூலம் அகற்​றப்​பட்​டன.

ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கைக்​குப் பிறகு இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையி​லான தூதரக உறவில் பெரும் பின்​னடைவு ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த சூழலில் கடந்த 17-ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள இந்​திய தூதரகத்​தின் பாதுகாப்பு தடுப்​பு​கள் வலுக்​கட்​டாய​மாக அகற்​றப்​பட்​டன. இதற்குப் பதிலடி​யாக தலைநகர் டெல்லி சாணக்​கியபுரி​யில் உள்ள பாகிஸ்​தான் தூதரக வளாகத்​தின் பாது​காப்பு தடுப்​பு​கள் நேற்று ஜேசிபி இயந்​திரம் மூலம் அகற்​றப்​பட்​டன.

பாகிஸ்​தான் தூதரக வளாகத்​தின் விசா வழங்​கும் பகு​தி​யில் கூட்டத்தை ஒழுங்​குபடுத்த தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. அவை முழு​மை​யாக இடித்து அகற்​றப்​பட்டு உள்​ளன.

மேலும் தூதரக வளாகத்​தின் முன்​பாக இரும்பு கதவு​கள், இரும்பு தடுப்புகள், இரும்​பிலான மேற்​கூரைகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. அவை அனைத்​தும் ஜேபிசி இயந்​திரம் மூலம் இடிக்​கப்​பட்​டன.

தூதரகத்​தின் முன்​பாக செங்​கற்​கள், கான்​கிரீட் கலவை​யால் தடுப்புச் சுவர் கட்​டப்​பட்டு இருந்​தது. அந்த தடுப்​புச் சுவரும் இடித்து தள்​ளப்​பட்​டிருக்​கிறது. இதுகுறித்து டெல்லி அரசு வட்டாரங்​கள் கூறும்​போது, “பாகிஸ்​தான் தூதரக வளாக சாலையில் ஆக்​கிரமிப்​பு​கள் மட்​டும் அகற்​றப்​பட்டு உள்​ளன” என்று தெரி​வித்​தன.

இதுதொடர்​பாக அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கைக்​குப் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்​திய அரசு நிறுத்தி வைத்து உள்​ளது. இதுதொடர்பாக பல்​வேறு சர்​வ​தேச அமைப்​பு​களிடம் பாகிஸ்தான் முறையிட்டு வரு​கிறது. ஆனால் அந்த நாட்​டுக்கு எந்த உதவி​யும் கிடைக்க​வில்​லை.

காஷ்மீர் விவ​காரத்​தில் அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​களின் நிலைப்​பாட்​டில் மிகப்​பெரிய மாற்​றம் ஏற்​பட்​டிருக்​கிறது. அந்த நாடு​கள் தற்​போது இந்​தி​யா​வுக்கு ஆதர​வாக செயல்​படத் தொடங்கி உள்​ளன. இவை உள்​ளிட்ட காரணங்​களால் பாகிஸ்​தான் அரசு கடும் விரக்​தி​யில் உள்​ளது.

இதன் எதிர்​விளை​வாக பாகிஸ்​தானில் பணி​யாற்​றும் இந்​திய தூதரக அதி​காரி​களுக்கு அந்த நாட்டு அரசு மறை​முக​மாக நெருக்​கடி அளித்து வரு​கிறது. அண்​மை​யில் இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள இந்​திய தூதரகத்​தின் பாது​காப்பு தடுப்​பு​கள் அகற்​றப்​பட்​டன.

மேலும் இந்​திய தூதரக அலுவலர்​களுக்கு அத்​தி​யா​வசிய பொருட்​களை விற்​பனை செய்ய வேண்​டாம் என்று வியா​பாரி​களுக்கு பாகிஸ்​தான் அரசு நெருக்​கடி அளித்து வரு​கிறது. தொடர்ந்து அத்​து​மீறல்​களில் ஈடு​படும் பாகிஸ்​தானுக்கு பாடம் புகட்​டு​வதற்​காக டெல்​லி​யில் உள்ள அந்த நாட்டு தூதரகத்​தின் பாது​காப்பு தடுப்புகள் அகற்​றப்​பட்​டு உள்​ளன. இவ்​வாறு அவர்​கள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டெல்லி​யில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்
வங்கதேச அதிபர் தேர்தலில் மிர்சா ஃபக்​ருல் இஸ்​லாம் ஆலம்​கீர் வெற்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in