உ.பி.யில் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியரையே அதிரவைத்த 8-ம் வகுப்பு மாணவன்

”என் வீட்டை இப்பவே திறந்து கொடுங்கள்”
உ.பி.யில் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியரையே அதிரவைத்த 8-ம் வகுப்பு மாணவன்
Updated on
1 min read

லக்கிம்பூர் கேரி: உத்​தரப் பிரதேச மாநிலம் லக்​கிம்​பூர் கேரி​யில் 8ம் வகுப்பு படிக்​கும் சிறு​வன் அமி​தாப் குப்​தா, ‘சம்​பூர்ண சமா தான் திவஸ்’ (முழு குறைதீர்க்​கும் நாள்) முகாமுக்​குத் தனி​யாக வந்​திருந்​தான்.

அவனை பார்த்த மாவட்ட ஆட்​சி​யர் அஞ்​சனி குமார் சிங், “தனியாகவா வந்​திருக்​கிறாய் ?” என்று கேட்க, அதற்கு அவன், “என் தந்தை மனநலக் குறை​பாட்​டால் பாதிக்​கப்​பட்​டுள்​ளார்; என்தாய் பிறர் வீடு​களில் வேலை செய்து எங்​களைக் காப்​பாற்றி வரு​கிறார்” என்று மிக​வும் துணிச்​சலுடன் பதிலளித்​தான்.

மேலும், தங்​களது கூட்​டுக் குடும்ப வீட்​டிற்கு உறவினர்​கள் சிலர் சட்​ட​விரோத​மாகப் பூட்​டுப் போட்​டுள்​ள​னர், அதை அகற்​றக்கோரி பலமுறை புகார் அளித்​தும் எந்​தப் பயனும் இல்லை என்றும், பூட்டப்​பட்​டுக் கிடக்​கும் வீட்​டின் பகு​தியை வாடகைக்கு விட்டால் அதில் வரும் பணத்​தைக் கொண்டு நானும், என் சகோதரியும் படிக்க முடி​யும் என்​றும் விளக்​கி​னான்.

அப்போது, அங்​கிருந்த காவல் ஆய்​வாளர் இப்​பிரச்​சினைக்கு விரை​வில் தீர்வு காணப்​படும் என உறு​தி​யளித்​த​போது, அமி​தாப் சட்​டென்​று, “செய்​கிறோம் என்று சொல்​லாதீர்​கள், உடனே செய்து காட்​டுங்​கள்” என ஆணித்​தர​மாகக் கூறி​னான்.

அதற்கு மாவட்ட ஆட்​சி​யர் அஞ்சனி குமார், அதி​காரி​கள் முன்னிலை​யில் தவறான வார்த்​தைகளைப் பேசக் கூடாது எனச் சிறு​வனை எச்​சரித்​ததோடு, தற்​போதைக்கு அவனது முழுக்கவனம் படிப்​பில்​தான் இருக்க வேண்​டும், கோரிக்கை குறித்து உரிய விசா​ரணை நடத்​தப்​படும் என்​றும் உறுதியளித்தார். மேலும், இந்​தச் சொத்​துப் பிரச்​சினை தொடர்பாக நேரில் சென்று வி​சா​ரித்து உடனடி​யாக நடவடிக்கை எடுக்க​ உள்ளூர் காவல்​ ஆய்​வாள​ருக்​கு ​ உத்​தரவிட்​டார்​.

உ.பி.யில் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியரையே அதிரவைத்த 8-ம் வகுப்பு மாணவன்
லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் ஸ்டாலின்: திமுகவினர் உற்சாக வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in