ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து அறிக்கை அளிக்க சிபிஐக்கு 2 வாரம் அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து அறிக்கை அளிக்க சிபிஐக்கு 2 வாரம் அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வர் ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசா​ரணை குறித்த நிலை அறிக்​கையை தாக்​கல் செய்ய சிபிஐக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்​பூரில் அவரது வீடு அருகே கொலை செய்​யப்​பட்​டார். இதுகுறித்த புலன்​வி​சா​ரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்​தர​விட்​டது. இந்த உத்​தர​வுக்கு எதி​ராக கடந்த 2025 அக்​டோபர் மாதம் முந்​தைய திமுக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது. இதையடுத்து உச்​சநீ​தி​மன்​றம், ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றிய உயர்​நீ​தி​மன்ற உத்​தர​வுக்கு இடைக்​கால தடை விதித்​தது.

இந்​நிலை​யில் ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கை சிபிஐ விசா​ரிக்க ஆட்​சேபம் இல்லை என தெரி​வித்து மேல்​முறை​யீட்டு மனுவை தவெக அரசு கடந்த ஜூலை 22-ம் தேதி திரும்​பப் பெற்​றது. இதையடுத்​து, ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசா​ரணை குறித்த நிலை அறிக்​கையை 4 வாரத்​தில் தாக்​கல் செய்​ய​ சிபிஐக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், உச்​சநீ​தி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் கே.​வி.​விஸ்​வ​நாதன், அருண் பள்ளி அமர்​வில் ஆம்​ஸ்ட்​ராங் கொலை தொடர்​பான வழக்கு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, புலன் விசா​ரணை குறித்த நிலை அறிக்​கையை தாக்​கல் செய்ய கால அவகாசம் வழங்க சிபிஐ தரப்​பில் கோரிக்கை வைக்​கப்​பட்​டது. அதை ஏற்​றுக்​கொண்ட நீதிப​தி​கள், 2 வாரம் அவகாசம் வழங்​கி, வி​சா​ரணை​யை செப்​.23-க்​கு தள்​ளிவைத்​தனர்​.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து அறிக்கை அளிக்க சிபிஐக்கு 2 வாரம் அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
செப்.15-ம் தேதி முதல் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று: முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in