குஜராத் மாநிலத்தில் 2 முதியவர்களிடம் ரூ.31 கோடி ‘டிஜிட்டல் கைது’ மோசடி: சிபிஐ தீவிர விசாரணை

குஜராத் மாநிலத்தில் 2 முதியவர்களிடம் ரூ.31 கோடி ‘டிஜிட்டல் கைது’ மோசடி: சிபிஐ தீவிர விசாரணை
Updated on
1 min read

புதுடெல்லி: குஜ​ராத்​தில் கடந்த ஆண்டு இரண்டு முதி​ய​வர்​களிடம் நடத்​தப்​பட்ட மிகப்​பெரிய ‘டிஜிட்​டல் கைது’ மோசடி வழக்​கு​களை விசாரிக்க சிபிஐ தீவிர​மாக களமிறங்​கி​யுள்​ளது. பாதிக்​கப்​பட்ட அந்த 2 முதி​ய​வரிடம் இருந்​தும் மொத்​தம் ரூ. 31 கோடி வரை சுருட்​டப்​பட்ட நிலை​யில் அதுகுறித்த விசா​ரணையை சிபிஐ தற்​போது முடுக்​கி​விட்​டுள்​ளது.

நம்​நாட்​டில் பெருகி வரும் டிஜிட்​டல் மோசடிகளைக் கட்​டுப்​படுத்த சிபிஐ விரி​வான விசா​ரணையை தீவிரப்​படுத்த வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆண்டு உத்​தர​விட்​டிருந்​தது. அதன் அடிப்​படை​யில், சிபிஐ-​யின் பொருளா​தா​ரக் குற்​றப்​பிரிவு தற்​போது புதிய முதல் தகவல் அறிக்​கைகளை பதிவு செய்​து, இந்த மோசடி​யின் பின்​னணி​யில் மூளை​யாக செயல்​பட்ட நபர்​களை தீவிர​மாக தேடி வரு​கிறது.

முதல் வழக்​கில் ரூ.19.2 கோடி: குஜ​ராத் காந்தி நகரைச் சேர்ந்த 74 வயது ஓய்​வு​பெற்ற பெண் மருத்​து​வர் ஒரு​வர், கடந்த 2025 மார்ச் மாதம் இந்த மோசடி கும்​பலிடம் சிக்​கி​யுள்​ளார். தொலைத்​தொடர்​புத் துறை அதி​காரி​கள் மற்​றும் காவல் துறை​யினர் எனத் தங்​களை அறி​முகப்​படுத்​திக் கொண்ட அந்த கும்​பல், மருத்​து​வர் மீது சட்​ட​விரோதப் பணப் பரி​மாற்​றப் புகார் இருப்​ப​தாகக் கூறி மிரட்​டி​யுள்​ளனர்.

வீடியோ கால் மூலம் அவரைத் தொடர்ந்து கண்​காணிப்​பிலேயே வைத்​திருந்த மோசடி கும்​பல், நான்கு மாதங்​களுக்​கும் மேலாக அவரை டிஜிட்​டல் கைதில் வைத்​துள்​ளது. அவரது வங்​கிக் கணக்​கு​கள், வைப்பு நிதி , வீடு மற்​றும் தங்க நகைகளை விற்​கச் சொல்லி கட்​டாயப்​படுத்​தி​யுள்​ளனர். அமலாக்​கத் துறை​யின் போலி கடிதத் தலைப்​பு​களைக் காட்டி நம்​ப​வைத்த அவர்​கள், அவரிட​மிருந்து மொத்​தம் ரூ. 19.2 கோடியை பறித்​துள்​ளனர்.

2-ம் வழக்​கில் ரூ.11.4 கோடி: மற்​றொரு வழக்​கில், அகம​தா​பாத்​தைச் சேர்ந்த ஓய்​வு​பெற்ற பேராசிரியை ஒரு​வரை ட்ராய் அதி​காரி​கள் என கூறிக்கொண்டு கும்​பல்​அணுகி​யுள்​ளது. அவரது ஆதார் விவரங்​கள் குற்​றச் செயல்​களில் பயன்​படுத்​தப்​பட்​ட​தாகக் கூறி அவரை மிரட்​டி​யுள்​ளனர்.

பின்​னர் அவரது கணவரை​யும் இந்த மிரட்​டலுக்​குள் கொண்டு வந்த கும்​பல், அவர்​களை அச்​சுறுத்தி வங்கி கணக்​கி​லிருந்து ரூ. 11.4 கோடி பணத்​தைப் பறித்​துள்​ளது. ‘சரி​பார்ப்​பு’ முடிந்​ததும் பணம் திருப்​பித் தரப்​படும் என நம்​ப​வைத்த மோசடி​யாளர்​கள், பின்​னர் தலைமறை​வாகி​விட்​டனர்.

இந்த இரண்டு வழக்​கு​களி​லும் இழப்பு மிகப்​பெரிய அளவில் இருப்​ப​தால், பணப் பரி​மாற்​றம் நடந்த பாதைகளைக் கண்​டறிய​வும், இதன் பின்​னணி​யில் உள்ள சர்​வ​தேசத் தொடர்​பு​கள் குறித்து வி​சா​ரிக்​க​வும் சிபிஐ-​யின் சிறப்​புப்​ பிரிவு தற்​போது களமிறங்​கி​யுள்​ளது.

குஜராத் மாநிலத்தில் 2 முதியவர்களிடம் ரூ.31 கோடி ‘டிஜிட்டல் கைது’ மோசடி: சிபிஐ தீவிர விசாரணை
பிரதமர் மோடி, ஜெய்சங்கருக்கு காங். எம்.பி. சசி தரூர் பாராட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in