​ராமர் கோயி​லில் விஐபி தரிசனம் பெயரில் ரூ.30,000 வரை வசூலித்தது அம்பலம்

​ராமர் கோயி​லில் விஐபி தரிசனம் பெயரில் ரூ.30,000 வரை வசூலித்தது அம்பலம்
Updated on
1 min read

புதுடெல்லி: அயோத்​தி​யில் ராமர் கோயில் திறக்​கப்​பட்ட பிறகு தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் வந்து செல்​கின்​றனர். விஐபிக்​கள், பணக்​காரர்​கள் அயோத்​திக்கு வந்து ஒரே நாளில் தரிசனம் முடித்து திரும்ப விரும்​பு​கின்றனர். அத்​துடன் ராமர் சிலைக்கு அரு​கில் நின்று தரிசிக்க நினைக்​கின்​றனர். இந்​நிலையில், அவர்​கள் தங்​கும் ஓட்​டல் நிர்​வாகிகளே விஐபி தரிசனத்​துக்கு ஏற்பாடு செய்​துள்​ளனர். இதற்​காக ரூ.30,000 வரை வசூலித்துள்ளனர்.

ராமர் கோயில் ஊழியர்​கள் சிலர் மூலம் ‘விஐபி’ அனு​மதி சீட்டு வாங்கி அவற்றை ஓட்​டல் நிர்​வாகி​கள் பிரித்​துக் கொண்​டுள்ளனர். இதன்​ மூலம் மாதந்​தோறும் லட்​சக்​கணக்​கான பணம் சம்​பா​திக்​கப்​பட்​டுள்​ளது. ராமர் கோயில் காணிக்கை திருட்​டில் முக்​கிய குற்​ற​வாளி​யான ராம் ஷங்​கர் யாதவ் (எ) டின்னு யாதவுக்​கும் இதில் தொடர்பு இருந்​துள்​ளது.

இதையடுத்து விஐபி அனு​மதி சீட்டு வழங்​கும் விவ​காரத்​தில் விதி மீறப்​பட்​டுள்​ளனவா என்று எஸ்​ஐடி அதி​காரி​கள் தீவிர​மாக விசாரிக்​கின்​றனர்.

தவிர, ராமர் கோயிலுக்கு வரும் பக்​தர்​கள் புகைப்​படம் எடுக்​க​வும் பணம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. இது​போல் பல வழிகளில் பக்​தர்​களிடம் கோடிக்​கணக்​கில் பணம் வசூலிக்​கப்​பட்​டது குறித்து எஸ்ஐடி தீவிர​மாக விசா​ரித்து வரு​கிறது.

இதுகுறித்து ஆர்​எஸ்​எஸ் பொதுச் செய​லா​ளர் தத்​தாத்​ரேயா ஹோசபலே கூறி​யிருப்​ப​தாவது:

காணிக்கை திருட்டு சம்​பவம் லட்​சக்​கணக்​கான ராம பக்​தர்​களின் நம்​பிக்​கை​யைப் புண்​படுத்​தி​யுள்​ளது. குற்​ற​வாளி​கள் கடுமை​யாகத் தண்​டிக்​கப்பட வேண்​டும். கோயில் நிர்​வாகத்​தில் வெளிப்​படை​யான நடை​முறையை உறுதி செய்ய வேண்​டும். ராமர் கோயில் ஒட்​டுமொத்த இந்து சமூகத்​தின் மரி​யாதை, நம்​பிக்கை மற்​றும் பக்​திக்​குரிய மைய​மாகத் திகழ்​கிறது. இதில், பல தலை​முறை​களின் தியாகம் இடம்​பெற்​றுள்​ளது. தற்​போது பொது​மக்​களிடையே நில​வும் குழப்​பம் மற்​றும் கேள்வி​களுக்​குத் தீர்வு காணப்பட வேண்​டும்.

நிதி நடை​முறை​கள் வெளிப்​படை​யாக​வும், கோயில் நிர்​வாகம் முறை​யாக​வும், அதன் ஆன்​மிகப் புனிதத்​தன்மை காக்​கப்​படும் வகை​யிலும் அமைய வேண்​டும். அப்​போது​தான், ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்​கட்​டளை, இந்து சமூகத்​தின் நம்​பிக்​கையை வலு​வாகத்​ தக்​க​வைத்​துக்​ கொள்​ளும்​. இவ்​வாறு அவர்​ கூறியுள்​ளார்​.

​ராமர் கோயி​லில் விஐபி தரிசனம் பெயரில் ரூ.30,000 வரை வசூலித்தது அம்பலம்
ரூ.16,350 கோடி இரும்பு ஆலை பணியை தொடங்கினார் சந்திரபாபு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in