தர்மஸ்தலா கோயில் மீது அவதூறு கிளப்ப ரூ.200 கோடி ஒதுக்கீடு: முன்னாள் ஊழியர் சின்னையா குற்றச்சாட்டு

தர்மஸ்தலா கோயில் மீது அவதூறு கிளப்ப ரூ.200 கோடி ஒதுக்கீடு: முன்னாள் ஊழியர் சின்னையா குற்றச்சாட்டு
Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாடக மாநிலத்​தில் உள்ள தர்​மஸ்​தலா மஞ்​சு​நாதேஸ்​வரா கோ​யில் மிக​வும் பிரசித்தி பெற்​றது. இதன் நிர்வாகிகள் 50-க்​கும் மேற்​பட்ட பெண்​களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்​த​தாக​வும், அந்த சடலங்களை நேத்​ராவதி ஆற்​றங்​கரை​யில் புதைத்​த‌​தாக​வும் கோயி​லின் முன்​னாள் தூய்மை பணி​யாளர் சின்​னையா கடந்த ஆண்டு போலீ​ஸில் புகார் அளித்​தார். இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீ​ஸார் நடத்​திய ஆய்​வில் 3 எலும்​புக்​கூடு​கள் சிக்​கின. ஆனால் அதன் மண்டை ஓடு​கள் கிடைக்​க​வில்​லை.

இதையடுத்து போலீ​ஸார், புகார்​தா​ர‌​ரான சின்​னையா பொய்​யான தகவல்​களை அளித்​த​தாகக் கூறி அவரை கைது செய்​தனர். இதை தொடர்ந்து தர்​மஸ்​தலா கோயில் நிர்​வாகி வீரேந்​திர ஹெக்​டே, ‘‘தர்​மஸ்​தலா கோயி​லின் மாண்பை கெடுக்​கும் வகை​யில் சின்​னையா பொய்ப் புகார் அளித்​துள்​ளார். இதன் பின்​னணி​யில் பலர் இருக்​கின்​றனர்'' என குற்​றம்​சாட்​டி​னார்.

கர்​நாடக முன்​னாள் அமைச்​சர் ஜனார்த்தன ரெட்​டி, ‘‘இதன் பின்​னணி​யில் தமிழக‌ காங்​கிரஸ் எம்பி சசி​காந்த் செந்​தி​லும், வேறு சில இந்து மத விரோ​தி​களும் இருக்​கின்​றனர்'' என குற்​றம்​சாட்​டி​னார்.

இந்​நிலை​யில் சின்​னையா கர்​நாடக உயர் ​நீ​தி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​த மனுவில், ‘‘தர்​மஸ்​தலா கோயில் மீதும் அதன் நிர்​வாகி வீரேந்​திர ஹெக்டே மீதும் அவதூறு கிளப்​புவதற்கு 20-க்​கும் மேற்​பட்​டோர் அடங்​கிய குழு மும்​முர​மாக வேலை பார்த்​தது. அக்குழுவை சேர்ந்த சிலர் என்னை தொடர்​பு​கொண்டு பணம் கொடுத்​தனர். அவருக்கு எதி​ராக புகார் அளித்​தால் ரூ.50 லட்​சம் தரு​வ​தாக​வும் கூறினர். அதன்​ பேரிலேயே போலீ​ஸில் புகார் அளித்​தேன். கோயில் மீது அவதூறு பரப்​புவதற்​காக ரூ.200 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது''என குறிப்​பிட்​டுள்​ளார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி சுராஜ் கோவிந்​த​ராஜ், ‘‘இந்த குற்​றச்​சாட்​டு​கள் குறித்து சிறப்​புப் புல​னாய்வு பிரிவு போலீ​ஸார் விசா​ரிக்க வேண்​டும். இந்த மனுவுக்கு 2 வாரங்​களுக்​குள் பதிலளிக்க வேண்​டும்​''என உத்​தர​விட்​டார்.

பிரகாஷ் ராஜின் பெயர்?

சின்​னை​யா​வின் புகார் மனு​வில் நடிகர் பிர​காஷ்ராஜின் பெயர் இடம்​பெற்​றுள்​ள​தாக கன்னட ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. இதனை மறுத்​துள்ள பிர​காஷ்ராஜ், ‘‘தவறான, பொய்​யான, அடிப்​படை ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு. இன்​னும் ஓரிரு தினங்​களில் ஊடகங்​களை சந்​தித்து விளக்​கம் அளிக்​கிறேன்​''என பதிலளித்​துள்​ளார்.

கர்​நாடக உள்​துறை அமைச்​சர் பிரி​யங்க் கார்கே கூறுகை​யில், ‘‘ஒரு​வரின் பெயர் இடம்​பெற்​றுள்​ள​தாலேயே அவர் குற்​ற​வாளி​யாகி​விட மாட்​டார். இதுகுறித்து போலீ​ஸார் விசா​ரணை நடத்​திய பிறகே உண்மை தெரியும்​'' என்​றார்.

தர்மஸ்தலா கோயில் மீது அவதூறு கிளப்ப ரூ.200 கோடி ஒதுக்கீடு: முன்னாள் ஊழியர் சின்னையா குற்றச்சாட்டு
ராமர் கோயிலில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in