சித்திவிநாயகர் கோயிலில் ரூ.18 கோடி திருட்டு: ராஜ் தாக்கரே புகார்

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே

Updated on
1 min read

மும்பை: ​மகா​ராஷ்டிர நவநிர்​மாண் சேனா கட்​சி​யின் மாணவர் அணி சார்​பில் மும்பையில் நேற்று நிகழ்ச்சி நடந்தது.

அதில் கட்சியின் தலைவர் ராஜ் தாக்​கரே பேசியதாவது: மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசித்த பெற்ற சித்​திவி​நாயகர் கோயில் அறங்​காவலர்​களின் விழிப்​புணர்​வால், உண்​டியல் பணத்​தைத் திருடிய சில ஊழியர்​கள் கையும் களவு​மாகப் பிடிபட்​டனர்.

இது தொடர்​பாக 8 அறங்​காவலர்​கள் மகா​ராஷ்டிர துணை முதல்வர் ஏக்​நாத் ஷிண்​டேவுக்கு எழு​திய கடிதத்​தின் அடிப்படையில் பார்க்​கும்​போது, திருட்டு வெளிச்​சத்​துக்கு வரும் முன் வாராந்​திர காணிக்கை ரூ.50 லட்​சத்​துக்​கும் குறை​வாகவே இருந்​தது. ஆனால், நடவடிக்கை எடுத்த பிறகு அது ரூ.1.5 கோடியாக உயர்ந்​தது. இதன் மூலம் ஆண்​டுக்கு ரூ.18 கோடி திருடப்​பட்டு வந்​தது அம்​பல​மாகி​யுள்​ளது. இவ்வாறு ராஜ் தாக்கரே கூறினார்.

இதுகுறித்து சித்​தி​வி​நாயகர் கோயில் அறக்​கட்டளையின் தலைவரும், ஏக்​நாத் ஷிண்டே தலைமையி​லான சிவசேனை தலை​வரு​மான சதா சர்வாங்​கர் கூறுகை​யில், “இவ்​விவ​காரத்​தில் தொடர்புடைய 9 ஊழியர்​கள் கைது செய்​யப்​பட்டுள்ளனர். கோயிலின் ஆண்டு வரு​மானம் இரண்டு ஆண்​டுகளுக்கு முன்பு ரூ.114 கோடி​யாக இருந்த நிலை​யில், தற்​போது ரூ.182 கோடி​யாக உயர்ந்துள்ளது,” என்று விளக்​கமளித்​தார்.

அயோத்தி ராமர் கோயில் காணிக்​கைத் திருட்டு வழக்​கில் பலரை காவல்​துறை​யினர் கைது செய்து தீவிர விசா​ரணை நடத்தி வரும் நிலை​யில், ராஜ் தாக்​கரே​யின் இந்த அதிரடி குற்​றச்​சாட்​டும், பிரதமர் மோடிக்கு அவர் விடுத்​துள்ள கோரிக்​கை​யும் தற்போது அம்​மாநில அரசி​யலில்​ பெரும்​ பரபரப்​பை ஏற்​படுத்​தியுள்​ளது.

<div class="paragraphs"><p><em>நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே</em></p></div>
கேரளா மழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in