ரூ.18 கோடி கஞ்சா பறிமுதல்: கேரளாவில் தம்பதி கைது

18 கிலோ கஞ்​சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட தம்பதி

18 கிலோ கஞ்​சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட தம்பதி

Updated on
1 min read

கொச்சி: கேரளா​வில் 'ஆபரேஷன் தூஃ​பான்' என்ற பெயரில் தீவிர போதைப் பொருள் தடுப்பு நடவடிக்​கையை அரசு மேற்கொண்டுள்​ளது.

இதன் ஒரு பகு​தி​யாக கொச்சி அருகே வைபின் பகு​தியை சேர்ந்த ஆயுஷ், அவரது மனைவி அனிகா ஆகிய இரு​வரை பெரும்​பாவூரில் போலீ​ஸார் நேற்று முன்​தினம் இரவு கைது செய்​தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 18 கிலோ உயர்தர கஞ்​சாவை பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூ.18 கோடியாகும். இது குறித்து டிஐஜி யதீஷ் சந்திரா கூறுகை​யில்,"இந்த தம்​ப​தி​யிட​மிருந்து போதைப்​ பொருட்களை வாங்​கிய சில்​லறை வி​யா​பாரி​கள் மற்​றும் வாடிக்கை​யாளர்​களை தேடி வரு​கிறோம்" என்​றார்​.

<div class="paragraphs"><p><em>18 கிலோ கஞ்​சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட தம்பதி</em></p></div>
ஆந்திரா: நின்ற லாரி மீது வேன் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in