கடந்த ஆண்டில் டெல்லியில் ரூ.1,250 கோடி சைபர் மோசடி

கடந்த ஆண்டில் டெல்லியில் ரூ.1,250 கோடி சைபர் மோசடி
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி பிராந்​தி​யத்​தில் கடந்த ஓராண்​டில் மட்​டும் அப்​பாவி மக்​களிட​ம் இருந்து ரூ.1,250 கோடியை சைபர் மோசடி கும்​பல் கொள்​ளை​யடித்​துள்​ளது.

சமீப கால​மாக ஆன்​லைன் மோசடி அதி​கரித்து வரு​கிறது. இதில் சமீபத்​திய நிகழ்​வாக டெல்லி ரோகிணி பகு​தி​யில் வசிக்​கும் 70 வயது முதி​ய​வர் மற்​றும் அவரது மனை​வி​யிடம் டிஜிட்​டல் அரெஸ்ட் முறை​யில் மர்ம நபர்​கள் ரூ.14.85 கோடியை மோசடி செய்​தனர்.

இந்​நிலை​யில் டெல்லி காவல்​துறை மூத்த அதி​காரி ஒரு​வர் கூறியதாவது: ”கடந்த 2024-ம் ஆண்​டில் டெல்லி பிராந்​தி​யத்​தில் சைபர் மோசடி கும்​பல் ரூ.1,100 கோடி மோசடி செய்​தது. இந்த கும்பலில் பெரும்​பாலானோர் கம்​போடி​யா, வியட்​நாம், லாவோஸ் ஆகிய நாடு​களில் தங்​கி​யிருந்​து, சீனக் கூட்​டாளி​களின் கட்டளைப்​படி செயல்​படு​வோர் ஆவர்.

2025-ம் ஆண்​டில் டெல்லி பிராந்​தி​யத்​தில் இந்த கும்​பலால் மோசடி செய்​யப்​பட்ட தொகை ரூ.1,250 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. இதில் ஆறு​தல் அளிக்​கும் விஷய​மாக மீட்​கப்​பட்ட பணமும் உயர்ந்துள்​ளது. 2024-ல் மோசடி செய்​யப்​பட்ட தொகை​யில் 10 சதவீதம் மீட்​கப்​பட்​டது. 2025-ல் இது 24 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது.

2025-ல் நாடு முழு​வதும் சைபர் மோசடி கும்​பலால் மோசடி செய்யப்​பட்ட தொகை சுமார் ரூ.20,000 கோடியாக இருக்​கும் என்று நம்பப்​படு​கிறது. இது ஒரு மாநிலத்​தின் வரவு செலவு திட்​டத்​திற்கு இணை​யான தொகை​யாகும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

கடந்த ஆண்டில் டெல்லியில் ரூ.1,250 கோடி சைபர் மோசடி
முதியவர்களின் முகாம் ஆகிறதா தவெக? - சர்ச்சைகளும்... சங்கடங்களும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in