ஆந்திர பள்ளி மாணவி மீது ரம்பத்தால் தாக்குதல்: போலீஸாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட இளைஞரின் வலது கால் அகற்றம்

ஆந்திர பள்ளி மாணவி மீது ரம்பத்தால் தாக்குதல்: போலீஸாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட இளைஞரின் வலது கால் அகற்றம்
Updated on: 
1 min read

அனந்தபூர்: பள்ளி மாணவி மீது ரம்​பத்​தால் தாக்​குதல் நடத்​திய வழக்​கில் போலீ​ஸாரால் சுட்​டுப்​பி​டிக்​கப்​பட்ட இளைஞரின் வலது கால் அகற்​றப்​பட்​டது.

ஆந்​திர மாநிலம், அனந்​த​புரம் மாவட்​டம், ராப்​தாடு மண்​டலத்​தில் உள்ள அரசு உயர்​நிலை பள்​ளிக்​குள், கடந்த மாதம் 31-ம் தேதி எலக்ட்​ரிக் ரம்​பத்​துடன் புகுந்த ஹேமந்த் எனும் இளைஞர், 10-ம் வகுப்பு மாணவியை (15) சர​மாரியாக வெட்டி விட்டு தப்​பியோடினார். இதில் படுகாயம் அடைந்த மாணவி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்​பட்டு, தொடர்ந்து சிகிச்​சைப் பெற்று வரு​கிறார்.

இதற்​கிடை​யில், ஆத்​மகூர் வனப்​பகுதி​யில் பதுங்கி இருந்த ஹேமந்தை, போலீ​ஸார் சுட்​டுப் பிடித்​தனர். பின்​னர் நீதி​மன்றத்தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட ஹேமந்தை 14 நாட்​கள் நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்க நீதிபதி உத்​தர​விட்​டார். அதே நேரத்தில் துப்​பாக்​கிச்​சூட்​டில் ஏற்​பட்ட காயங்​களுக்கு சிகிச்சை அளிக்க ஹேமந்தை மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்க நீதிபதி உத்தர​விட்​டார்.

இந்​நிலை​யில் ஹேமந்​தின் வலது​கால் முட்டியில் துப்​பாக்கி குண்டுகள் பாய்ந்​ததால், அந்த காலை அகற்ற வேண்டு​மென மருத்​து​வர்​கள் கூறினர். நேற்று அவரின் வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்​றப்​பட்​டது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

ஆந்திர பள்ளி மாணவி மீது ரம்பத்தால் தாக்குதல்: போலீஸாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட இளைஞரின் வலது கால் அகற்றம்
பஞ்சாப் தேர்தலில் ‘போதைப்பொருள் பிரச்சினை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? - ஓர் அலசல்

X