மேக கூட்டங்களுக்கு நடுவே சுழலும் உணவகம்: ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் புதுமை!

மேக கூட்டங்களுக்கு நடுவே சுழலும் உணவகம்: ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் புதுமை!
Updated on
1 min read

பாராமுல்லா: ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் 14,000 அடி உயரம் கொண்ட அஃபர்வத் சிகரத்தில் சுழலும் உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இது அந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு பனி சறுக்கு ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் Ski Drag லிப்ட் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

சுழலும் உணவகம்: குல்மார்க்கில் திறக்கப்பட்டுள்ள இந்த சுழலும் உணவகம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு தனித்துவ அனுபவத்தை அளிக்கும். பனி படர்ந்த மலைகள், காஷ்மீர் பாரம்பரிய சமையல் கைவண்ணத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், மேக கூட்டங்கள் என பரந்த இமயமலையின் அமைப்பை இந்த சுழலும் உணவகத்தில் அமர்ந்தபடி ரசிக்கலாம்.

ஏற்கெனவே குல்மார்க்கில் கோண்டோலா (கேபிள் கார் ரைடு), பனி சறுக்கு, Igloo கஃபே உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்நிலையில் இந்த சுழலும் உணவகம் குல்மார்க்கின் மற்றொரு அடையாளமாக அமைந்துள்ளது.

மேக கூட்டங்களுக்கு நடுவே சுழலும் உணவகம்: ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் புதுமை!
“மனதளவில் திடமாக இருந்தால்...” - வெற்றி ரகசியம் சொல்லும் திலக் வர்மா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in