ராமர் கோயில் நன்கொடை திருட்டு: யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்? - அகிலேஷ் கேள்வி

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்

Updated on: 
1 min read

“அயோத்தி - ராமர் கோயில் நன்கொடை திருட்டு குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்?” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த 1990-ல் அயோத்தியில் கர சேவகர்கள் மீது உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் டிசம்பரில் அயோத்திக்கு வருகை தர திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அயோத்திக்கு வருவதற்கு முன் கர சேவகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை அன்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அகிலேஷ் யாதவ் பெயரை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக யோகி ஆதித்யாநாத் விமர்சித்திருந்தார். இந்நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் அகிலேஷ் இப்போது பேசியுள்ளார்.

“ராமர் கோயில் நன்கொடை திருட்டில் ஈடுபட்டவர்களை அரசு காத்து வருகிறது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் அது இந்த விவகாரத்தில் தோல்வி கண்டுள்ளது. இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்? இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?

வளர்ச்சி என்ற பெயரில் அயோத்தியில் கைப்பற்றப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு கூட கிடைக்கவில்லை. மக்கள் அதனால் விரக்தி அடைந்துள்ளனர்” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை அன்று யோகி ஆதித்யநாத் கூறியதாவது; “பகவான் ராமரின் பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மற்றும் தடியடி மேற்கொண்டவர்கள் அயோத்திக்கு வரலாம். அதற்கு முன் அவர்கள் ராம பக்தர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

கடந்த 1990 சம்பவத்தை அவர் குறிப்பிட்டு இருந்தாலும் அப்போது ஆட்சியில் இருந்த முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர்) குறித்தும், அதன் தலைவர்கள் குறித்தும் யோகி ஆதித்யநாத் பேசவில்லை. அப்போது ஜனதா தளம் கட்சி அம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது. அதன் பின்னர் 1992-ல் சமாஜ்வாதி கட்சியை முலாயம் சிங் யாதவ் நிறுவினார்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்​தர்​கள் அளிக்​கும் நன்​கொடை, காணிக்கை பணம் திருடப்​படு​வ​தாக புகார்​கள் எழுந்​தன. சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்​யப்​பட்​டிருப்​ப​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது. இதுதொடர்​பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு சார்​பில் கடந்த ஜூன் 15-ம் தேதி சிறப்பு புல​னாய்வு குழு (எஸ்​ஐடி) நியமிக்​கப்​பட்​டது.

இந்த விசாரணை குழு, இது தொடர்பான அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய 8 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அறக்கட்டளையின் நிர்வாகிகள் ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்</p></div>
“அமெரிக்க இடைத்தேர்தல் தோல்வி வரலாற்றுப் பின்னடைவு” - ட்ரம்ப் வேதனை

X