வடக்கு மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்களில் ரூ.341 கோடி ‘கவச்' திட்டத்துக்கு அரசு ஒப்புதல்

வடக்கு மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்களில் ரூ.341 கோடி ‘கவச்' திட்டத்துக்கு அரசு ஒப்புதல்
Updated on
1 min read

புதுடெல்லி: வடக்கு மற்​றும் மேற்கு ரயில்வே மண்​டலங்​களில் ரூ.341 கோடி மதிப்​பிலான ‘கவச்' திட்​டத்​துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

‘கவச்' என்​பது இந்​திய ரயில்​வே​யால் உள்​ நாட்​டிலேயே உருவாக்கப்​பட்ட தானி​யங்கி ரயில் பாது​காப்பு அமைப்​பாகும். இது ரயில்​கள் நேருக்கு நேர் மோது​வதை தடுத்​தல், ஓட்​டுநர் கவனக்​குறை​வாக சிக்​னல்​களை கடந்து செல்​லும்​ போது தானாகவே ரயிலை நிறுத்​துதல், மூடு ​பனி காலங்​களில் எச்சரித்தல் போன்ற செயல்​பாடு​கள் மூலம் விபத்​துகளை தவிர்க்கிறது. ரயி​லின் வேகம் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்​டு, நிர்​ண​யிக்​கப்​பட்ட அளவைத் தாண்​டும் போது வேகம் கட்டுப்படுத்​தப்​படு​கிறது.

இந்​நிலை​யில் வடக்கு ரயில்வே மண்​டலத்​தின் அம்​பாலா கோட்டத்​தில் ரூ.201 கோடி செல​வில் 811 கி.மீ. தொலை​வுக்​கும், மேற்கு ரயில்வே மண்​டலத்​தின் அகம​தா​பாத் கோட்​டத்​தில் ரூ.140 கோடி செல​வில் ரூ.598 கி.மீ. தொலை​வுக்​கும் ‘கவச்' திட்​டத்தை செயல்​படுத்த ரயில்வே அமைச்​சகம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

அம்​பாலா கோட்​டத்​தில் அம்​பாலா கன்​டோன்​மென்ட் - லூதியானா, கல்​கா-சண்​டிகர்- நியூ மொரிண்​டா- சானே​வால், ஸ்ரீஹிந்த் - தவுலத்​பூர் சவுக், ராஜ்புரா - பதிண்டா உள்​ளிட்ட வழித்​தடங்​களில் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்பட உள்​ளது. இவை ஹரியா​னா, பஞ்சாப், இமாச்​சல பிரதேசம் ஆகிய மாநிலங்​களை இணைக்​கும் முக்​கிய வழித் ​தடங்​கள் ஆகும். மேலும் பயணி​கள் மற்​றும் சரக்கு போக்​கு​வரத்தை அதிக அளவில் கையாளும் வழித் ​தடங்​கள் என ரயில்வே அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

குஜ​ராத் மாநிலத்​தின் அகம​தா​பாத் கோட்​டத்​தில் ஏற்​கெனவே சுமார் 702 கி.மீ. தொலை​வுக்கு ‘கவச்' அமைப்பை நிறுவ ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது கிடைத்​துள்ள புதிய ஒப்​புதலின் மூலம், அப்​பிரி​வின் எஞ்​சிய பகு​தி​களும் இந்த பாது​காப்பு அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்​ளன. மேலும் உலகள​வில் மிக உயர்ந்த பாது​காப்​புத் தரமான எஸ்​ஐஎல்-4 (Safety Integrity Level-4) தர நிலைகளுக்கு இணங்​க ‘கவச்​' வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

வடக்கு மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்களில் ரூ.341 கோடி ‘கவச்' திட்டத்துக்கு அரசு ஒப்புதல்
Maa Behen: சமூகம் உருவாக்கிய ‘சூனியக்காரிகள்’ ரேகா, ஜெயா, சுஷ்மா | திரை தேவதைகள் 21

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in