ஐ-பேக் நிறுவனத்தில் சோதனை: ஆதாரங்களை மம்தா அழித்ததாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

ஐ-பேக் நிறுவனத்தில் சோதனை: ஆதாரங்களை மம்தா அழித்ததாக  அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நிலக்​கரி ஊழல் தொடர்​பான சட்ட​விரோத பணப்​பரிமாற்ற வழக்​கில், கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் அலு​வல​கம், அதன் இயக்​குநர் பிரதீக் ஜெயின் வீடு உள்ளிட்ட இடங்​களில் அமலாக்​கத் துறை கடந்த வியாழக்​ கிழமை சோதனை நடத்​தி​யது.

இந்த சோதனை​யில் மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​யிட்டு விசா​ரணைக்கு இடையூறு செய்​த​தாக உச்ச நீதிமன்றத்​தில் அமலாக்​கத் துறை கடந்த சனிக்​கிழமை மனு தாக்கல் செய்​தது.

இந்​நிலை​யில் உச்ச நீதி​மன்​றத்​தில் அமலாக்​கத் துறை நேற்று தாக்​கல் செய்த மனு​வில், “ஐ-பேக் நிறு​வனத்​துக்கு எதி​ரான சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை வழக்​கில் சோதனையை தடுத்​தது மற்​றும் ஆதா​ரங்​களை அழித்​ததற்​காக முதல்​வர் மம்தா, மாநில காவல் துறை இயக்​குநர் மற்​றும் கொல்​கத்தா காவல் ஆணை​யர் மீது வழக்​குப் பதிவு செய்ய உத்​தர​விட வேண்​டும். சட்​டத்தை பாதுகாக்க வேண்​டியர்​களே கடும் குற்​றத்​துக்கு உடந்தையாகிவிட்​டனர்.

அவர்​கள் அமலாக்​கத் துறை அதி​காரி​களை அச்​சுறுத்தி கோப்புகள், மின்​னணு சாதனங்​கள் உள்​ளிட்ட முக்​கிய ஆதாரங்களை பறித்​துச் சென்​றனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி கொல்​கத்தா உயர் நீதி​மன்​றத்தை அணுகினோம். அப்​போது நீதி​மன்​றத்​தில் குழப்​பம் ஏற்படுத்தப்பட்ட​தால் விசா​ரணையை ஒத்​திவைக்க வேண்​டிய கட்டா​யம் நீதிப​திக்கு ஏற்​பட்​டது” என்று கூறி​யுள்​ளது.

ஐ-பேக் நிறுவனத்தில் சோதனை: ஆதாரங்களை மம்தா அழித்ததாக  அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகல் - ஆயுஷ் பதோனிக்கு வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in