அமித் ஷா பற்றி அவதூறு பேச்சு: ராகுல் காந்தி வாக்குமூலம் பதிவு

அமித் ஷா பற்றி அவதூறு பேச்சு: ராகுல் காந்தி வாக்குமூலம் பதிவு
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 2018 கர்​நாடக சட்​டப்​பேரவை தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது, பாஜக தேசிய தலை​வ​ராக இருந்த அமித் ஷாவை ராகுல் காந்தி விமர்​சனம் செய்​தார்.

“பாஜக தூய்​மை​யான அரசி​யலை நம்​புவ​தாக கூறி​னாலும், கொலை வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட ஒரு​வர் அக்​கட்​சி​யின் தலை​வ​ராக உள்​ளார்” என சாடி​னார்.

சொராபுதீன் ஷேக் போலி என்​க​வுன்ட்​டர் வழக்​கின் அடிப்​படை​யில் ராகுல் இதை கூறி​யிருந்தார். ஆனால் 2014-ம் ஆண்​டிலேயே அவ்​வழக்​கில் இருந்து அமித் ஷா விடுவிக்​கப்​பட்​டிருந்ததால் ராகுலுக்கு எதி​ராக உ.பி. சுல்​தான்​பூர் நீதி​மன்​றத்​தில் உள்​ளூர் பாஜக தலை​வர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்ந்​தார்.

இவ்​வழக்​கில் ராகுல் 2024 பிப்​ர​வரி​யில் சரண் அடைந்து ஜாமீன் பெற்​றார். 2024 ஜூலை​யில் ஆஜராகி தன் மீதான குற்​றச்​சாட்​டு​களை மறுத்​தார். இவ்​வழக்​கில் புகார்​தா​ரர் மற்​றும் சாட்​சிகளின் குறுக்கு விசா​ரணையை தொடர்ந்​து, குற்​ற​வியல் நடை​முறைச் சட்​டத்​தின் பிரிவு 313-ன் கீழ் நேரில் விசா​ரணைக்கு ஆஜராக நீதி​மன்​றம் உத்​தர​விட்​டிருந்​தது.

இதன் அடிப்​படை​யில் ராகுல் நேற்று சுல்​தான்​பூர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி தனக்கு எதி​ராக முன்​வைக்​கப்​பட்ட ஆதா​ரங்​கள் தொடர்​பாக தனது வாக்​குமூலத்தை பதிவு செய்தார். அதன்பின் நீதி​மன்ற வளாகத்தை விட்டு ராகுல் வெளி​யேறி​னார். இவ்​வழக்​கின் அடுத்​த வி​சா​ரணை மார்ச்​ 9-ம்​ தேதி நடைபெற உள்​ளது.

அமித் ஷா பற்றி அவதூறு பேச்சு: ராகுல் காந்தி வாக்குமூலம் பதிவு
டெல்லி ஏஐ மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க புர்ஜ் கலீபாவில் ஜொலித்த மூவர்ண கொடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in