‘பிக்பாக்கெட்' நபர்களிடம் ஜாக்கிரதையாக இருங்​கள்: சிபிஎஸ்இ, மத்திய அரசு மீது ராகுல் விமர்சனம்

விடைத்தாள் மறுமதிப்பீட்டு விவகாரத்தில் காட்டம்
‘பிக்பாக்கெட்' நபர்களிடம் ஜாக்கிரதையாக இருங்​கள்: சிபிஎஸ்இ, மத்திய அரசு மீது ராகுல் விமர்சனம்
Updated on
1 min read

புதுடெல்லி: ​விடைத் ​தாள்​கள் சரி ​பார்க்​கப்​படு​வதற்கு மாணவர்களிடம் பணம் வசூலிக்​கப்​படு​வதை சுட்​டிக்​காட்​டி, காங்கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி மோடி அரசை​யும் சிபிஎஸ்இ அமைப்​பை​யும் ‘பிக்​பாக்​கெட் காரர்​கள்' என்ற வார்த்​தையைப் பயன்​படுத்தி கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார்.

இது குறித்து ராகுல் காந்தி வெளி​யிட்​டுள்ள பதி​வில், “பிக்​பாக்கெட் காரர்​களிடம் ஜாக்​கிரதை​யாக இருங்​கள். இன்று அவர்​கள் சிபிஎஸ்​இ-க்​குள்​ளேயே அமர்ந்​திருக்​கிறார்​கள். சிபிஎஸ்​இ-​யின் தவறால் மதிப்​பெண்​கள் தவறாக வந்​தால், உங்​களுக்கு என்ன கிடைக்​கும் ? ஒரு கட்டண ரசீது கிடைக்​கும். டிஜிட்​டல் ஸ்கேன் நகல்: ஒரு பாடத்​திற்கு ரூ.100, மறுகூட்​டல்: ஒரு தாளுக்கு ரூ.100, மறும​திப்​பீடு: ஒரு கேள்விக்கு ரூ.25 என்று இருக்​கும்.

ஒரு குழந்தை தனது சொந்த விடைத்​தாளை சரி​பார்ப்​ப​தற்கு மட்​டுமே ரூ.2,000 வரை செல​வழிக்க வேண்​டி​யிருக்​கும். யோசித்​துப் பாருங்​கள்: 4 லட்​சம் குழந்​தைகள் இது​போன்ற விண்ணப்பங்களை சமர்ப்​பிக்​கும்​போது, சிபிஎஸ்இ எவ்​வளவு பணத்தை சுருட்​டு​கிறது! மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்யும்​ போது, மதிப்​பெண்​களில் தவறுகள் நடப்​பது உறு​தி. அதை சரிசெய்​வதற்கோ குழந்தை தன் பணத்​தைக் கொடுக்க வேண்​டி​யுள்​ளது. தவறு சிபிஎஸ்​இ-​யினுடையது; தண்​டனை குழந்​தைக்​கு; வரு​மானம் அரசாங்​கத்​திற்​கு” என்று அவர் கூறி​யுள்​ளார்.

சிபிஎஸ்இ விடைத்​தாளை மறும​திப்​பீடு செய்​யும் முறை மற்​றும் மாணவர்​கள் எந்​தெந்த நிலைகளில் கட்​ட​ணம் செலுத்த வேண்டும் என்​பதை ராகுல் காந்​தி​யுடன் வீடியோ​வில் பேசிய ஒரு மாணவர் விளக்​கி​னார். இதையடுத்து இது தொடர்​பாக சிபிஎஸ்இ மற்​றும் மத்​திய அரசை ராகுல் காந்தி சாடி​யுள்​ளார். முன்​ன​தாக 12ம் வகுப்பு தேர்​வு​களுக்​கான விடைத்​தாள் மதிப்​பீட்டு முறையை சீர்​குலைத்​த​தாக சிபிஎஸ்இ மற்​றும் மத்திய அரசு மீது ராகுல் காந்தி நேற்​று முன்​தினம்​ குற்​றம்​ சாட்​டி​னார்​.

‘பிக்பாக்கெட்' நபர்களிடம் ஜாக்கிரதையாக இருங்​கள்: சிபிஎஸ்இ, மத்திய அரசு மீது ராகுல் விமர்சனம்
பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்கு பச்சை துரோகம்: தங்கம் தென்னரசு விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in