தனியார் பல்கலை. மாணவி பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: பஞ்சாபில் மாணவர்கள் போராட்டம்

தனியார் பல்கலை. மாணவி பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: பஞ்சாபில் மாணவர்கள் போராட்டம்
Updated on: 
1 min read

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பக்வாரா நகரத்தில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர், கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து மாணவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த தகவல் சமூக வலைதளம் மூலம் அதிகாலை 1.45 மணி அளவில் பரவியது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த ஜன்னல்கள், பூந்தொட்டிகளை உடைத்தும், சிலவற்றை தீயிட்டு கொளுத்தியும் உள்ளனர். அந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியானது. இதோடு ஜலந்தர் - பக்வாரா தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். தற்போது அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

“கடந்த 24-ம் தேதி அன்று மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலை அடுத்துதான் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தொழில்நுட்ப ரீதியில் விசாரணையை தொடங்கி உள்ளோம். சம்மந்தப்பட்ட மாணவி இடமிருந்து அறிக்கை பெற்றுள்ளோம். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். அது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்கள் இன்று பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தற்போது இங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது” என்று ஜலந்தர் காவல் சரக டிஐஜி நவீன் சிங்க்லா தெரிவித்துள்ளார்.

தனியார் பல்கலை. மாணவி பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: பஞ்சாபில் மாணவர்கள் போராட்டம்
“என் வாழ்நாளில் வேதனையான நிகழ்வு நடந்த நாள்” - முதல்வர் விஜய் அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in