​ராகுலுக்கு எதி​ரான வழக்கை விசாரிக்​கத் தடை

​ராகுலுக்கு எதி​ரான வழக்கை விசாரிக்​கத் தடை
Updated on: 
1 min read

புதுடெல்லி: ரஃபேல் விமான ஒப்​பந்​தம் தொடர்​பாக 2018-ல் பிரதமர் மோடியை விமர்​சித்​தபோது, “திருடர்​களின் தலை​வர்” என்று ராகுல் தெரி​வித்​த​தாகக் கூறப்​படு​கிறது. இந்​தக் கருத்து பிரதமரின் நற்​பெயருக்கு களங்​கம் ஏற்​படுத்​து​வ​தாகக் கூறி, பாஜகவின் மகேஷ் என்​பவர் வழக்கு தொடர்ந்​தார்.

இதை எதிர்த்து ராகுல் உச்​ச நீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்தார். இந்த மனு நீதிப​தி​கள் விக்​ரம் நாத், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மகா​ராஷ்டிர அரசு உள்​ளிட்ட எதிர்​மனு​தா​ரர்​கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்த நீதிப​தி​கள், அது​வரை நீதி​மன்​றத்தில் நடை​பெறும் வழக்கு நடவடிக்கைகளுக்கு இடைக்​காலத் தடை வி​தித்​து உத்​தர​விட்​டனர்​

​ராகுலுக்கு எதி​ரான வழக்கை விசாரிக்​கத் தடை
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு: நதிநீர் இணைப்பு பற்றி பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in