நீட் வினாத்தாள் தயாரித்த பேராசிரியர்கள் ரகசிய இடத்தில் தங்கவைப்பு

செல்போன், லேப்​டாப், ஸ்மார்ட் வாட்ச் பயன்​படுத்த தடை
நீட் வினாத்தாள் தயாரித்த பேராசிரியர்கள் ரகசிய இடத்தில் தங்கவைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: மருத்​துவ இளநிலைப் படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்​றது. இந்த வினாத்தாள் முன்​கூட்​டியே கசிந்​திருப்​பது தெரிய​வந்​தது.

இதுகுறித்து சிபிஐ வழக்​குப் பதிவு செய்து தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது. வினாத்​தாள் தயாரிப்பு குழு​வில் இடம் பெற்றிருந்த பேராசிரியர்கள் சிலர் நீட் வினாத்​தாளை பல லட்சங்களுக்கு விற்​பனை செய்​திருப்​பது சிபிஐ விசா​ரணை​யில் தெரியவந்துள்ளது. மகா​ராஷ்டி​ரா​வின் புனேவை சேர்ந்த இவர்​கள் உட்பட 13 பேர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர்.

இந்த சூழலில் வரும் 21-ம் தேதி நீட் மறு​தேர்வு நடத்​தப்பட உள்​ளது. இதற்​காக தேசிய தேர்வு முகமை சார்​பில் வினாத்​தாள் தயாரிக்​கப்​பட்​டிருக்​கிறது. இந்த வினாத்​தாளை தயாரித்த பேராசிரியர்​கள் அனை​வரும் தற்​போது ரகசிய இடத்​தில் தங்க வைக்​கப்​பட்டு உள்​ளனர். அவர்​கள் மொபைல்​போன், லேப்​டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்​ளிட்ட மின்​னணு சாதனங்​கள் பயன்​படுத்த தடை விதிக்கப்பட்டு உள்​ளது.

பேராசிரியர்​கள் தங்​கி​யிருக்​கும் இடத்​தில் பல அடுக்கு போலீஸ் பாது​காப்பு போடப்​பட்டு உள்​ளது. தங்​கி​யிருக்​கும் இடத்தை விட்டு பேராசிரியர்​கள் வெளியே செல்ல முடி​யாது. வெளிநபர்​கள் யாரை​யும் சந்​திக்க முடி​யாது. வரும் 21-ம் தேதி நீட் தேர்வு நிறைவடை​யும் வரை அவர்​கள் ரகசிய இடத்​தில் தங்க வைக்கப்பட்டு இருப்​பார்​கள் என்று தேசிய தேர்வு முகமை அதிகாரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

விமானப்​படை ஹெலி​காப்​டர்​கள்

கடந்த 3-ம் தேதி நீட் தேர்​வின்​போது அஞ்​சல் துறை வாக​னங்​கள் மூலம் நாடு முழு​வதும் வினாத்​தாள்​கள் கொண்டு செல்லப்பட்டன. வரும் 21-ம் தேதி நீட் மறு​தேர்​வின்​போது வினாத்தாளை கொண்டு செல்ல விமானப் படை​யின் உதவி கோரப்​பட்டு உள்ளது. இதன்​படி 18 முக்​கிய இடங்​களில் இருந்து எம்​ஐ-17 ரக ஹெலி​காப்​டர்​கள் மூலம் நாடு முழு​வதும் நீட் வினாத்தாள்​கள் கொண்டு செல்​லப்​படும் என்று விமானப்​படை வட்​டாரங்​கள் தெரிவித்துள்ளன.

நீட் மறு​தேர்வு தொடர்​பாக தேசிய தேர்வு முகமை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: நாடு முழு​வதும் 551 நகரங்​களில் நீட் தேர்வு நடத்தப்பட உள்​ளது. வெளி​நாடு​களில் 14 நகரங்​களில் இந்த தேர்வு நடை​பெற உள்​ளது. சுமார் 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாண​வியர் தேர்வை எழுத உள்​ளனர்.

சமூக வலை​தளங்​களில் பரவும் எந்த தகவலை​யும் நம்ப வேண்டாம். தேசிய தேர்வு முகமை​யின் அதி​காரப்​பூர்வ தகவல்களை மட்​டுமே நம்ப வேண்​டும் என்று மாணவ, மாணவியரை கண்​டிப்​புடன் அறி​வுறுத்தி வரு​கிறோம். இதுதொடர்​பாக சமூக வலை​தளங்​களை​யும் உன்​னிப்​பாகக் கண்காணித்து வரு​கிறோம். தவறான தகவல்​களை பரப்​புவோர் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டு வரு​கிறது. இவ்​வாறு அந்த வட்டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

நீட் வினாத்தாள் தயாரித்த பேராசிரியர்கள் ரகசிய இடத்தில் தங்கவைப்பு
மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்: இண்டியா கூட்டணி கூட்டத்தில் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in