உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் பொறுப்பாளராக மீண்டும் பிரியங்கா

உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் பொறுப்பாளராக மீண்டும் பிரியங்கா
Updated on: 
1 min read

புதுடெல்லி: உத்​தர பிரதேச சட்​டப்​பேரவைத் தேர்​தலில் காங்கிரஸ் பொறுப்​பாளராக மீண்​டும் பிரியங்கா வத்ரா பொறுப்பேற்​றுள்​ளார். கடந்த முறை உ.பி. சட்​டப்​பேரவைத் தேர்தலில் காங்​கிரஸின் பொறுப்​பாளராக பிரியங்கா காந்தி இருந்​தார்.

அப்​போது உ.பி.யின் அனைத்​துத் தொகுதி​களி​லும் காங்கிரஸ் போட்​டி​யிட்டு, வெறும் 2 இடங்​களில் மட்​டுமே வெற்​றி​பெற்​றது. சமாஜ்வாதி 111 இடங்​களி​லும், பகுஜன் சமாஜ் ஒரு தொகுதி​யிலும் வெற்றி பெற்​றன. 255 இடங்​களில் வென்ற ஆளும் பாஜக இரண்டாவது முறை​யாக ஆட்சி அமைத்​தது. இத​னால், 2024 மக்களவைத் தேர்​தலில் சமாஜ்வாதி​யுடன் கூட்​டணி வைத்து காங்கிரஸ் போட்​டி​யிட்​டது. மொத்​தமுள்ள 80 தொகுதி​களில் காங்கிரஸுக்கு 2 தொகுதி​களும், சமாஜ்வாதிக்கு 37 தொகுதிகளும் கிடைத்​தன.

இம்​முறை சட்​டப்​பேரவைத் தேர்​தலிலும் சமாஜ்வாதி​யுடன் கூட்டணி அமைக்க காங்​கிரஸ் விரும்​பு​கிறது. இந்​நிலை​யில், சட்டப்​பேரவைத் தேர்​தலுக்​காகக் களமிறங்​கி​யுள்ள காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் பிரியங்கா காந்தி மாநிலத்​தின் தேர்​தல் பொறுப்பை முழு​மையாக ஏற்​றுக்​கொண்​டுள்​ளார். தேர்தலுக்கான விரிவான வியூகத்தை அவர் வகுக்க உள்​ளார்.

உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் பொறுப்பாளராக மீண்டும் பிரியங்கா
“முதல்வரே போதையில் இருக்கக் கூடாது” - பஞ்சாப் பேரணியில் பகவந்த் மானை சாடிய ராகுல் காந்தி

X