

அமராவதி: தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு தனியார் சொகுசு பேருந்து புறப்பட்டது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி கொவ்வூரு மேம்பாலம் அருகே வந்தபோது பேருந்தில் திடீரென தீப்பிடித்தது. பேருந்தில் இருந்த செல்ப் மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதைக் கவனித்த பேருந்து ஓட்டுநர் பஸ்ஸை நிறுத்திவிட்டார். இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் இறங்கி தப்பினர்.
அதற்குள்ளாக பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு பேருந்து முற்றிலுமாக கருகியது. இதுகுறித்து கொவ்வூரு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.