பிலிப்பைன்ஸில் இந்திய கலைப் பொருட்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு பரிசளித்த பிரதமர் மோடி

மணிலாவில் பிரதமர் மோடியால் பரிசளிக்கப்பட்ட இந்திய கலைப் பொருட்கள்

மணிலாவில் பிரதமர் மோடியால் பரிசளிக்கப்பட்ட இந்திய கலைப் பொருட்கள்

Updated on: 
2 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது மணிலா பயணத்தில் சர்வதேசத் தலைவர்களுக்கு இந்திய மாநிலங்களின் கலைப் பொருட்களைப் பரிசளித்தார். இதில், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் கலைப்பொருட்கள் இடம்பெற்றிருந்தன.

நவம்பர் 16-17 தேதிகளில் பிலிப்பைன்ஸுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23ஆவது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டிலும், 21வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டிலும் கலந்துகொண்டார்.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் டகாயிச்சி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் ஆகியோருடன் நடைபெற்ற குவாட் தலைவர்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

இந்த இரண்டு நாள் பயணத்தின்போது, பிற நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மோடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கலைப் பொருட்களை சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கினார். இந்தப் பரிசுகள் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டன. ராஜஸ்தான், காஷ்மீர், தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் கலைப்பொருட்கள் இதில் இடம்பெற்றிருந்தன.

தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்குவதற்காக இத்தகைய பரிசுப் பொருட்களை எடுத்துச் செல்வதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வரிசையில், மணிலா பயணத்தின்போது சிலருக்கு ராஜஸ்தானி பிச்வாய் ஓவியமும், சிலருக்கு நீல நிற பனாரஸ் காட்டன் பட்டும், சில தலைவர்களுக்கு பிட்லிவேர் வெள்ளி பதிக்கப்பட்ட பூச்சாடியும் பரிசளிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் சோழர் காலத்தின் மாதிரியைப் போலான நடராஜர் வெண்கலச் சிலையும் பரிசாக அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு ராஜஸ்தானின் நாதத்வாராவிலிருந்து கொண்டுவரப்பட்ட புகழ்பெற்ற தங்க நிற பிச்வாய் ஓவியத்தைப் பரிசளித்தார். அடர் நீல நிற பனாரஸ் காட்டன் பட்டு சால்வையை ஜப்பானியப் பிரதமர் சனே டகாயிச்சிக்கு வழங்கினார்.

பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருக்கு, கையால் நெய்யப்பட்ட காஷ்மீரி பட்டு கம்பளத்தையும், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நீல மட்பாண்டம் ஒன்றையும் பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.

தமிழ்நாட்டிலிருந்து செய்து கொண்டுவரப்பட்ட ஒரு பழங்கால சோழர் கால வெண்கலச் சிலையை, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.

மேலும் அவர், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு, செதுக்கப்பட்ட வெள்ளி உருளி ஒன்றைப் பரிசளித்தார். இது ஒரு பிரபலமான அலங்கார வெள்ளி உருளியாகும். மக்கள் பொதுவாக இதை நுழைவாயிலிலோ அல்லது தொழுகை அறையிலோ வைப்பார்கள்.

பிரதமர் மோடி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் தனித்துவமான கலைகளைச் சித்தரிக்கும் பொருட்களை மற்ற ஆசியான் தலைவர்களுக்கும் பரிசளித்தார்.

கம்போடியப் பிரதமர், மியான்மர் மற்றும் புருணை நாட்டு தலைவர்களுக்கு கர்நாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளிப் பதிக்கப்பட்ட பூந்தொட்டியையும், லாவோஸ் பிரதமருக்கு தங்க வேலைப்பாடுகள் கொண்ட ரோஸ் குவார்ட்ஸ் யானையையும் பிரதமர் மோடி பரிசளித்தார்.

குஜராத்தின் ரோகன் கலை ஓவியத்தை தாய்லாந்து பிரதமருக்கும், அகேட் கிண்ணத்தை திமோர் - லெஸ்டே பிரதமருக்கும், பாரம்பரிய தோல் சுவர் அலங்காரத்தை வியட்நாம் பிரதமருக்கும் பிரதமர் மோடி வழங்கினார்.

<div class="paragraphs"><p>மணிலாவில் பிரதமர் மோடியால் பரிசளிக்கப்பட்ட இந்திய கலைப் பொருட்கள்</p></div>
‘சுயசரிதையில் போபர்ஸ் ஊழல் குறித்து சோனியா மவுனம்’ - மூத்த பத்திரிகையாளர் விமர்சனம்

X