மக்கள் சேவையே மகேசன் பணி: அரசு ஊழியர்களுக்குப் பிரதமர் அறிவுரை

மக்கள் சேவையே மகேசன் பணி: அரசு ஊழியர்களுக்குப் பிரதமர் அறிவுரை
Updated on
1 min read

புதுடெல்லி: “மக்​கள் சேவையே மகேசன் பணி” என்ற கொள்​கை​யுடன் அரசு ஊழியர்​கள் அர்ப்​பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார்.

மத்​திய அரசு ஊழியர்​களுக்​காக 'கர்​மயோகி சாதனா சப்தாஹ்' என்ற பெயரில் திறன் மேம்​பாட்டு பயிற்சி வழங்கப்​படு​கிறது. இதன்​படி ஏப்​ரல் 2 முதல் 8-ம் தேதி வரை சிறப்பு பயிற்சி அளிக்​கப்பட உள்​ளது. இதன் தொடக்க விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காணொலி வாயி​லாக பேசி​ய​தாவது: கடந்த பிப்​ர​வரி​யில் பிரதமர் அலு​வல​கத்தை (சேவா தீர்த்) திறந்​து வைத்​தேன்.

அப்​போது, “வரும் 2047-க்​குள் வளர்ச்சி அடைந்த இந்​தியாவை உரு​வாக்க வேண்​டும் என்ற லட்​சி​யத்​தோடு சேவா தீர்த் அலு​வல​கங்​களில் மத்​திய அரசு ஊழியர்​கள் கால் பதிக்க வேண்​டும்” என்று அழைப்பு விடுத்​தேன். இப்போதும் அதே கருத்தை முன்​வைக்​கிறேன். மத்​திய அரசு துறை​களில் பணி​யாற்​றும் ஒவ்​வொரு ஊழியரும் கர்மயோகி​யாக செயல்பட வேண்​டும்.

'மக்​கள் சேவையே மகேசன் பணி' என்ற கொள்​கை​யுடன் அரசு ஊழியர்​கள் அர்ப்​பணிப்பு உணர்​வுடன் செயல்பட வேண்​டும். மக்​களின் நலன்​களுக்கு முன்​னுரிமை அளிக்க வேண்​டும். இந்​தி​யா​வின் ஒவ்​வொரு குடிமக​னுக்​கும் ஒரு கனவு இருக்​கிறது. அதை நிறைவேற்ற அரசு ஊழியர்​கள் முழு ஆதரவு அளிக்க வேண்​டும். இன்​றைய உலகில் தொழில்​நுட்​பங்​கள் மிகுந்த முக்​கி​யத்​து​வம் பெற்று உள்ளன.

கடந்த 11 ஆண்​டு​களில் மத்​திய அரசின் அனைத்து துறைகளி​லும் புதிய தொழில்​நுட்​பங்​கள் அறி​முகம் செய்யப்பட்டு உள்​ளன. ஆட்சி நிர்​வாகத்​தில் புதிய தொழில்​நுட்ப புரட்​சியை ஏற்​படுத்தி இருக்​கிறோம். தற்​போது ஆட்சி நிர்​வாகத்​தில் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​துக்​கும் முன்​னுரிமை அளித்து வருகிறோம். இதன்​மூலம் அரசு நிர்​வாகத் திறன் மேலும் மேம்​படும்.

அனைத்து அரசு ஊழியர்​களும் தொழில்​நுட்​பத்தை முழு​மை​யாகப் பயன்​படுத்த வேண்​டும். குறிப்​பாக செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தில் நிபுணத்​து​வம் பெற வேண்​டும். ஒரு காலத்​தில் முன்​னேறிய மாநிலங்​கள், பின்​தங்​கிய மாநிலங்​கள், நலிவடைந்த மாநிலங்​கள் என்று பல்​வேறு பிரிவு​கள் இருந்​தன.

மத்​திய அரசின் நடவடிக்​கைகளால் இந்த இடைவெளி குறைந்​திருக்​கிறது. மாநிலங்​கள் வளர்ச்சி அடைந்​தால் மட்டுமே நமது நாடு வளர்ச்சி அடை​யும். கிராமங்​கள், நகரங்​களில் செயல்​படும் மத்​திய அரசு அலு​வல​கங்​கள், மத்​திய அரசின் முக​மாக உள்​ளன.

அவற்றில் பணி​யாற்​றும் அரசு ஊழியர்​கள் மக்​களின் நம்​பிக்​கையை பெறும் வகை​யில் பணி​யாற்ற வேண்​டும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற நமது லட்சிய பயணத்தில் “கர்மயோகி சாதனா சப்தாஹ்” பயிற்சி முகாம் மிக முக்கிய அத்தியாயமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

மக்கள் சேவையே மகேசன் பணி: அரசு ஊழியர்களுக்குப் பிரதமர் அறிவுரை
தலைமை தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in