மேற்கு வங்கத்தில் பாஜக அபார வெற்றிக்கு அதிபர் ட்ரம்ப் வாழ்த்து; பிரதமர் மோடிக்கு சர்வதேச ஊடகங்கள் புகழாரம்

மேற்கு வங்கத்தில் பாஜக அபார வெற்றிக்கு அதிபர் ட்ரம்ப் வாழ்த்து; பிரதமர் மோடிக்கு சர்வதேச ஊடகங்கள் புகழாரம்
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் நேற்று முன்​தினம் வெளி​யிடப்​பட்​டன. மொத்​தம் 293 தொகுதிகளுக்​கான முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. இதில் 207 தொகு​தி​களில் பாஜக வெற்றி பெற்​றது. இதுகுறித்து சர்​வ​தேச ஊடகங்​கள் செய்​தி​களை வெளி​யிட்டு உள்​ளன.

பிரிட்​டனை சேர்ந்த பிபிசி, ‘‘மோடி​யின் பாஜக வங்​கத்தை வென்றிருக்​கிறது’’ என்ற தலைப்​பில் செய்தி வெளி​யிட்டு உள்​ளது. பல்​வேறு சவால்​கள் நிறைந்த மேற்​கு​வங்​கத்​தில் பாஜக வெற்றி பெற்​றிருக்​கிறது. இது மோடி ஆட்​சி​யின் முக்​கிய மைல்​கல் என்று பிபிசி புகழாரம் சூட்டி உள்​ளது. பிரிட்​டனை சேர்ந்த தி கார்​டியன் நாளிதழ், “மோடி​யின் பாஜக மேற்​கு​வங்​கத்​தில் முதல்​முறை​யாக வெற்றி பெற்​றிருக்​கிறது’’ என்ற தலைப்​பில் செய்தி வெளியிட்டிருக்​கிறது.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் டைம்ஸ் நாளிதழ், “எதிர்க்​கட்​சி​யின் கோட்​டையை பாஜக கைப்​பற்றி உள்​ளது’’ என்ற தலைப்​பில் விரி​வான செய்​தியை வெளி​யிட்​டிருக்​கிறது. மேற்​கு​வங்​கத்​தில் பாஜக​வின் வெற்றி, வரலாற்று சிறப்​புமிக்க வெற்றி என்று அந்த நாளிதழ் புகழாரம் சூட்​டி​யிருக்​கிறது.வாஷிங்​டன் போஸ்ட் நாளிதழ், “முக்​கிய மாநில​மான மேற்​கு​வங்​கத்தை பாஜக வென்​றிருக்​கிறது’’ என்ற தலைப்​பில் செய்தி வெளி​யிட்டு உள்​ளது.

பாகிஸ்​தானின் டான், வங்​கதேசத்​தின் டாக்கா டிரிபியூன் ஆகிய நாளிதழ்​களும் மேற்​கு​வங்​கத்​தில் பாஜக அபார வெற்றி பெற்றிருப்​ப​தாக செய்​தி​களை வெளி​யிட்​டு உள்​ளன. அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் நேற்று கூறும்போது, “வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் வெற்றியை (மேற்குவங்கம்) பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்’’ என்றார்.

மேற்கு வங்கத்தில் பாஜக அபார வெற்றிக்கு அதிபர் ட்ரம்ப் வாழ்த்து; பிரதமர் மோடிக்கு சர்வதேச ஊடகங்கள் புகழாரம்
சட்டப்பேரவை கட்சித் தலைவராக ரங்கசாமி ஒருமனதாக தேர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in