தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து

குடியரசு தலைவர் திரவுபதி முர்விடம் இருந்து விருது பெறும் விளையாட்டு வீரர் அரவிந்த் சிங்

குடியரசு தலைவர் திரவுபதி முர்விடம் இருந்து விருது பெறும் விளையாட்டு வீரர் அரவிந்த் சிங்

Updated on: 
1 min read

புதுடெல்லி: 2025-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

2025-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (நவ.13) நடைபெற்றது. சுமார் 36 நிமிடங்கள் நடைபெற்ற இவ்விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விளையாட்டுத் துறை செயலாளர் ஹரி ரஞ்சன் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு கேல் ரத்னா விருதுக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதேநேரத்தில், தடகள வீரர்கள் தேஜஸ்வின் சங்கர், பிரியங்கா கோஸ்வாமி, சதுரங்க வீராங்கனை திவ்யா ஜிதேந்திர தேஷ்முக், ஹாக்கி வீரர் ராஜ்குமார் பால், கபடி வீராங்கனை பூஜா உள்ளிட்ட 17 விளையாட்டு வீரர்களுக்கு 'அர்ஜுனா' விருதுகள் வழங்கப்பட்டன. மூத்த இந்திய கால்பந்து வீரர் இசையா அருமைநாயகம் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் 'அர்ஜுனா' விருதை பெற்றுக்கொண்டார்.

மேலும், விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஐந்து பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது. பர்வீர் சிங், சோட்டே லால் யாதவ், நேஹா நந்தகுமார் சவான் ஆகியோர் துரோணாச்சாரியா விருதுகளைப் பெற்றனர். மேலும், தர்மேந்திர சிங் யாதவ், வீரேந்திர குமார் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் துரோணாச்சாரியா விருதுகளைப் பெற்றனர்.

விளையாட்டை ஊக்குவிப்பதிலும் மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக புனேவில் உள்ள ஆர்மி பாராலிம்பிக் நோட் நிறுவனத்துக்கு, ராஷ்டிரய கேல் ப்ரோத்சாஹன் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. மேலும், பல்ஜீத் கவுர், ரிமோ சாஹா உள்ளிட்ட 4 நபர்களுக்கு 2024-ம் ஆண்டுக்கான டென்சிங் நோர்கே தேசிய சாகச விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

<div class="paragraphs"><p>குடியரசு தலைவர் திரவுபதி முர்விடம் இருந்து விருது பெறும் விளையாட்டு வீரர் அரவிந்த் சிங்</p></div>
“தவெகவினரிடம் இருந்தே பெண்களை பாதுகாக்க முடியாத விஜய்க்கு எதற்கு முதல்வர் பதவி?” - நயினார் கேள்வி

X