தனியார் இடங்களில் தொழுகைக்கு தடை விதிக்க முடியாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: தனி​யாருக்கு சொந்​த​மான இடங்​களில் தொழுகை நடத்​து​வதற்கு உ.பி.​யில் சம்​பல் உள்​ளிட்ட சில மாவட்​டங்​கள் தடை விதித்​தன. இந்த சூழலில் சம்​பல் மாவட்ட நிர்​வாகத்​தின் உத்​தரவை எதிர்த்து அலகா​பாத் உயர் நீதி​மன்​றத்​தில் முனாசீர் கான் என்​பவர் வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்​கில் நீதிப​தி​கள் அத்​துல் தர், சித்​தார்த் நந்​தன் அமர்வு நேற்று வழங்​கிய தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய அரசி​யலமைப்​பின் 25-வது பிரிவு, ஒவ்​வொரு குடிமக​னுக்​கும் தான் விரும்​பும் மதத்​தைப் பின்​பற்​ற​வும், பரப்​ப​வும் முழு உரிமை அளிக்​கிறது. எனவே, எந்தவொரு நபரும் தனது சொந்த வளாகத்தில் நடத்தும் பிரார்த்தனைகளையோ அல்லது மதச் சடங்குகளையோ தடை செய்ய முடியாது.

தனியார் இடங்களில் நடைபெறும் பிரார்த்தனைகளுக்கு தனி நபர் அல்லது குழுக்கள் ஆட்சேபம் தெரிவித்தால் அதை அரசு கவனத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. முனாசீர் கான் அனுமதி கேட்ட நிலம் 1995-ல் மசூதி கட்ட அவரது தாத்தாவால் ஒதுக்கப்பட்டது. எனினும் அந்த இடத்தில் உள்ள கட்டமைப்பை முழு மசூதியாக நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆனால், அங்கு தொழுகை நடத்துவதை தடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ஈரான் போருக்கு கூடுதலாக ரூ.18 லட்சம் கோடி நிதி தேவை: பென்டகன் கோரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in