மறுமலர்ச்சிக்கான வரலாற்று நடவடிக்கை: மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தைப் பாராட்டி பிரதமருக்கு பிரதிபா பாட்டீல் கடிதம்

மறுமலர்ச்சிக்கான வரலாற்று நடவடிக்கை: மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தைப் பாராட்டி பிரதமருக்கு பிரதிபா பாட்டீல் கடிதம்
Updated on
1 min read

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்​கீடு தொடர்​பாக இந்​தி​யா​வின் முதல் பெண் குடியரசுத் தலை​வ​ரான பிர​திபா தேவிசிங் பாட்​டீல், பிரதமர் நரேந்​திர மோடிக்கு கடிதம் எழு​தி​யுள்​ளார்.

அதில் அவர், ‘நாரி சக்தி வந்​தன் அதினி​யம்' (மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம்) அமல்​படுத்​தப்​படு​வதை மறுமலர்ச்​சிக்​கான வரலாற்று சிறப்​புமிக்க நடவடிக்கை என பாராட்​டி​யுள்​ளார். இது இந்தியாவின் ஜனநாயகக் கட்​டமைப்​பில் பெண்​களின் பிரதிநிதித்​து​வத்தை வலுப்​படுத்​து​வதற்​கான ஒரு மைல் ​கல் நடவடிக்கை என்​றும் அவர் குறிப்​பிட்​டுள்​ளார்.

பிரதமருக்கு எழு​திய கடிதத்​தில் பிர​திபா பாட்​டீல் கூறியுள்ளதாவது: மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​கான வரலாற்​றுச் சிறப்​புமிக்க இந்த முயற்​சியை நான் மனதா​ரப் பாராட்​டு​கிறேன். இந்த அரசமைப்​புச் சட்​டத் திருத்​தம், சட்​டப்​பேர​வை​களில் பெண்​களின் பங்​களிப்​பை​யும் பிரதிநிதித்துவத்​தை​யும் அதி​கரிப்​ப​தன் மூலம், இந்​தி​யா​வின் ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்​படுத்​தும் ஒரு மறுமலர்ச்சி நடவடிக்​கை​யாகும். இந்​தத் திருத்​தம் என்​பது வெறும் சட்ட விதியல்ல; இது பாலின சமத்​து​வத்தை மேம்​படுத்​து​வதற்​கும், அனை​வரை​யும் உள்​ளடக்​கிய நிர்​வாகத்தை வளர்ப்​ப​தற்​கும், வலிமை​யான முற்​போக்​கான இந்​தி​யா​வைக் கட்டியெழுப்புவதற்கும் நாம் கொண்​டுள்ள கூட்டு உறு​தி​யின் வெளிப்​பா​டாகும்.

உயர்ந்த அதி​கார அமைப்​பு​களில் பெண்​களின் பங்​களிப்பு அதிகரிப்​பது, கொள்கை முடிவு​களைச் சமநிலை​யுடன் எடுக்க உதவும். பல்​வேறு தரப்​புப் பார்​வை​களை உள்​ளடக்​கிய இத்தகைய நடை​முறை, இன்​னும் கனி​வான மற்​றும் பிரதிநிதித்துவத் தன்மை கொண்ட கொள்கை முடிவு​களுக்கு வழிவகுக்​கும். இந்த முற்​போக்​கான நடவடிக்​கை, குறிப்​பாகக் கிராமப்​புற மற்​றும் விளிம்​பு நிலைச் சமூகங்​களைச் சேர்ந்த எண்ணற்ற பெண்​களின் லட்​சி​யங்​களுக்கு உயிர் கொடுக்​கும். அவர்​கள் தலை​மைப் பொறுப்​பு​களை ஏற்​க​வும், தேச நிர்மாணத்தில் அர்த்​த​முள்ள பங்​களிப்பை வழங்​க​வும் பெரிதும் ஊக்​கமளிக்​கும் என்று நான் நம்​பு​கிறேன். இவ்​வாறு பிரதீ​பா பாட்​டீல்​ தெரி​வித்​துள்​ளார்​.

மறுமலர்ச்சிக்கான வரலாற்று நடவடிக்கை: மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தைப் பாராட்டி பிரதமருக்கு பிரதிபா பாட்டீல் கடிதம்
தமிழகத்தில் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in