பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி

பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி
Updated on
1 min read

பாட்னா: பிஹாரில் சட்​டப்​பேர​வைத் தொகுதி இடைத்​தேர்​தலில், பிரசாந்த் கிஷோர் போட்​டி​யிடு​வார் என்று அறி​விக்கப்பட்டுள்ளது.

பிஹார் மாநிலத்​தில் காலி​யாக உள்ள பங்​கிபூர் சட்​டப்​பேரவை தொகு​திக்கு ஜூலை 30-ல் இடைத்​தேர்​தல் நடை​பெறும் என்​று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. வேட்​புமனு தாக்​கல் செய்​வதற்​கான கடைசி நாள் ஜூலை 13 ஆகும்.

இந்​நிலை​யில், ஜன் சுராஜ் கட்​சி​யின் உயர்​மட்​டக் குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​துக்​குப் பிறகு அக்​கட்​சி​யின் மாநிலத் தலை​வர் மனோஜ் பாரதி செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “பங்​கிபூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி இடைத்​தேர்​தலில், ஜன் சூரஜ் கட்​சி​யின் வேட்​பாள​ராக பிர​சாந்த் கிஷோர் போட்​டி​யிடு​வார்” என்​றார்.

இந்த தொகுதி எம்​எல்​ஏ-​வாக இருந்த பாஜக தலை​வர் நிதின் நபீன் மாநிலங்​களவைக்கு தேர்ந்​தெடுக்​கப்​பட்​டதை அடுத்து இந்த இடம் காலி​யானது. பாஜக​வின் கோட்​டை​யாகக் கருதப்​படும் இந்​தத் தொகு​திக்​கு, அக்​கட்சி இன்​னும் அதி​காரப்​பூர்​வ​மாக வேட்​பாளரை அறிவிக்​க​வில்​லை.

இருப்​பினும், அஜய் அலோக், நீல் ரத்​தன் கோஷ் மற்​றும் அஜீத் குமார் லாலி உள்​ளிட்​டோரில் ஒருவரை வேட்பாள​ராக நிறுத்​து​வது குறித்​து கட்​சி மேலிடம்​ பரிசீலித்​து வருவதாகக்​ தகவல் வெளியாகி உள்ளது.

பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி
பொற்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதல்வர் பகவந்த் மான் படத்துடன் அடையாள அட்டை அணிந்து வர தடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in