பிரசாந்த் கிஷோருக்கு ரூ.96 கோடி, மனைவிக்கு ரூ.102 கோடி சொத்து

பிர​சாந்த் கிஷோர்

பிர​சாந்த் கிஷோர்

Updated on
1 min read

பாட்னா: பிஹார் மாநிலம் பங்​கிப்​பூர் சட்டப்​பேரவை தொகுதி இடைத்​தேர்தலில் ஜன்சுராஜ் கட்​சி​யின் நிறு​வனரும், பிரபல அரசியல் வியூக வகுப்​பாள​ரு​மான பிர​சாந்த் கிஷோர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்​து, பாஜக சார்​பில் 32 வயதான இளம் தலை​வர் நீரஜ் குமார் சின்ஹா களம்​ இறக்​கப்​பட்​டுள்​ளார்​.

தேர்​தல் நடத்​தும் அதி​காரி​யிடம் பிர​சாந்த் கிஷோர் தாக்​கல் செய்துள்ள சொத்து விவர பிர​மாணப் பத்​திரத்​தில் கூறியிருப்பதாவது: ”பிர​சாந்த் கிஷோருக்கு ரூ.22.19 கோடி மதிப்பிலான அசை​யும் சொத்​துகளும், ரூ.73.87 கோடி மதிப்பிலான அசையா சொத்​துகளும் உள்​ளன. அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.96.06 கோடி​யாகும்.

அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த மருத்​துவப் பேராசிரியை​யும் கிஷோரின் மனை​வி​யு​மான ஜானவி தாஸிற்கு ரூ.89.51 கோடி மதிப்​பிலான அசை​யும் சொத்​துகளும், ரூ.12.42 கோடி மதிப்பிலான அசையா சொத்​துகளும் உள்​ளன. இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.101.93 கோடி​யாகும். பிர​சாந்த் கிஷோருக்கு வங்​கி​யில் ரூ.5.77 கோடி அளவிற்கு கடன் பொறுப்​பு​கள் (கடன்) உள்​ளது. இவ்​வாறு வேட்​பு மனு​வில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p><em>பிர​சாந்த் கிஷோர்</em></p></div>
அமலாக்கத் துறை வழக்குக்கு எதிரான ஐசரி கணேஷ் தாக்கல் செய்த மனு வாபஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in