மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம்: டெல்லியில் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாகனங்கள் குறைந்தன

மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம்: டெல்லியில் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாகனங்கள் குறைந்தன
Updated on
1 min read

புதுடெல்லி: மாசுக்​கட்​டுப்​பாடு சான்​றிதழ் கட்​டா​யம் என்று அறிவிக்​கப்​பட்​ட​தால், டெல்​லி​யில் பெட்​ரோல் நிலை​யங்​களுக்கு வரும் வாக​னங்​கள் குறைந்​துள்​ளது.

நாட்​டின் தலைநகர் டெல்​லி​யில் கடும் குளிர், பனி மற்​றும் காற்று மாசு தொடர்ந்து அதி​கரித்து காணப்​படு​கிறது. ஆனந்த் விகார், இந்​தியா கேட் உள்​ளிட்ட டெல்​லி​யின் முக்​கிய பகு​தி​களில் நாளுக்கு நாள் காற்​றின் தர குறி​யீடு மிக மோசமடைந்து வரு​கிறது.

இந்​நிலை​யில், டெல்​லி​யில் காணப்​படும் காற்று மாசை குறைக்​கும் நடவடிக்​கை​யில் ஆளும் டெல்லி அரசு இறங்​கி​யுள்​ளது. இதில், ஒரு முக்​கிய நடவடிக்​கை​யாக வாக​னங்​களுக்​கான மாசு கட்​டுப்​பாட்டு சான்​றிதழை அரசு கட்​டாயப்​படுத்தி உள்​ள​தாக டெல்லி சுற்​றுச்​சூழல் அமைச்​சர் மஜிந்​தர் சிங் சிர்சா அறி​வித்​தார்.

இந்த உத்​தர​வைத் தொடர்ந்து டெல்லி வாகன ஓட்​டிகளிடம் இந்த சான்​றிதழ் கட்​டா​யம் இருக்க வேண்​டும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதனை வைத்​திருப்​பவர்​களுக்கே பெட்​ரோல் நிலை​யங்​களில் பெட்​ரோல் அல்​லது டீசல் வழங்​கப்​படும் என்று கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில் நேற்று முதல் மாசுக்​கட்​டுப்​பாட்டு சான்​றிதழ்​(பி​யுசி) இல்​லா​விட்​டால் பெட்​ரோல் கிடை​யாது என்று அறிவிக்​கப்​பட்​ட​தால் பெட்​ரோல் நிலை​யங்​களுக்கு வரும் வாக​னங்​கள் பெரு​மளவு குறைந்​துள்​ள​தாக ஊழியர்​கள் தெரிவிக்​கின்​றன. சான்​றிதழ் உள்ள வாக​னங்​களுக்கு மட்​டுமே பெட்​ரோல், டீசல் நிரப்​பப்​படு​கிறது என்​றும் பெட்​ரோல் நிலைய ஊழியர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

அனைத்து பெட்​ரோல் நிலை​யங்​களி​லும் பியுசி சான்​றிதழ் இல்​லா​விட்​டால் பெட்​ரோல் கிடை​யாது என்ற வாசகங்​கள் அடங்​கிய பதாகைகள் தொங்க விடப்​பட்​டுள்​ளன.

இதைத் தொடர்ந்து மாசு கட்​டுப்​பாட்டு சான்​றிதழ் வழங்​கும் நிலை​யங்​களில் வாகன ஓட்​டிகள் குவிந்​துள்​ளனர். இதுகுறித்து ஜன்​பாத் பெட்​ரோல் நிலை​யத்​துக்கு வந்த வாடிக்​கை​யாளர் முகேஷ்கு​மார் என்​பவர் கூறும்​போது, “பணம் கொடுத்து வாக​னத்தை வாங்கி விட்டு அதை இயக்க முடி​யாத வகை​யில் விதி​களை அமல்​படுத்​தி​னால் எப்​படி" என்​றார். மற்​றொரு வாடிக்​கை​யாளர் கூறும்​போது, “இது​போன்ற விதி​முறை​களை அமல்​படுத்​து​வது சரி​தான். அப்​போது​தான் டெல்​லி​யில் காற்று மாசு​பாடு குறை​யும்” என்​றார்.

வாக​னங்​களுக்கு மாசுக் கட்​டுப்​பாட்டு சான்​றிதழ் உள்​ளதா என்​ப​தைக் கண்​காணிக்க நியமிக்​கப்​பட்ட டெல்லி போக்​கு​வரத்து கழக அதி​காரி ஜே.டி.சர்மா என்​பவர் கூறும்​போது, “பெட்​ரோல் நிலை​யங்​களில் பியுசி சான்​றிதழை காண்​பித்த பிறகு பெட்​ரோல் நிரப்ப அனு​மதி அளிக்​கிறோம். சில பெட்​ரோல் நிலை​யங்​களில் கேம​ராக்​கள் இன்​னும் வகைப்​பட்​ட​வில்​லை. இதுதொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்​குத் தெரி​வித்​துள்​ளோம். மேலும் வாக​னங்​கள் பிஎஸ்-6 தரநிலையை பெற்​றுள்​ளதா என்​ப​தை​யும் கண்​காணிக்​கிறோம்.

இதுதொடர்​பாக அதிக அளவில் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ள​தால் சாலைகளில் வாகன நடமாட்​டம் குறைந்​துள்​ளது. பியுசி சான்​றிதழ் இல்​லாத வாக​னங்​களுக்​கு ரூ.10 ஆயிரம்​ அபராதம்​ வி​திக்​கப்​படுகிறது” என்​றார்​.

மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம்: டெல்லியில் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாகனங்கள் குறைந்தன
கான்வே 227, டாம் லேதம் 137 ரன்கள் விளாசல்: நியூஸிலாந்து அணி 500+ ரன்கள் குவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in