பஞ்சாப்: போதைப் பொருள் விவகாரத்தில் போலீஸ் அதிகாரி இடைநீக்கம்

பஞ்சாப்: போதைப் பொருள் விவகாரத்தில் போலீஸ் அதிகாரி இடைநீக்கம்
Updated on: 
1 min read

கன்னா: பஞ்சாப் மாநிலம், கன்னா மாவட்​டத்​தில் சிவசேனா நிர்வாகி வீட்​டில், போலீஸ் உதவி சப்​-இன்​ஸ்​பெக்​டர் (ஏஎஸ்ஐ) போதைப் பொருட்​களை ரகசி​ய​மாக வைத்​தது தொடர்​பான சிசிடிவி காட்​சிகள் வெளி​யாகி​யுள்​ளன.

அந்த வீடியோ​வில், சாதாரண உடை​யில் வரும் போலீஸ் அதி​காரி ஒரு​வர், படுக்​கையறை​யில் உள்ள மெத்​தை​யின் அடி​யில் ஒரு பொட்​டலத்தை மறைத்து வைப்​பது போன்​றும், சிறிது நேரத்துக்குப் பிறகு சீருடை​யில் வரும் போலீ​ஸார் அந்த அறைக்குள் நுழைந்​து, அந்​தப் பொட்​டலத்தை போதைப்​பொருள் எனக் கூறி பறி​முதல் செய்​வது போன்ற காட்​சிகளும் பதிவாகியுள்ளன.

இதுகுறித்​து, கன்னா மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் தர்​பன் அலு​வாலியா கூறும்​போது, “சம்​பந்​தப்​பட்ட போலீஸ் அதி​காரி பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார். மேலும், எஸ்பி அந்தஸ்திலான அதி​காரி தலை​மை​யில் விசா​ரணைக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது​’’ என்​றார்​.

பஞ்சாப்: போதைப் பொருள் விவகாரத்தில் போலீஸ் அதிகாரி இடைநீக்கம்
போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்?

X