ஹரியானாவில் ராட்டினம் உடைந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

ஹரியானாவில் ராட்டினம் உடைந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
Updated on
1 min read

பரீதாபாத்: ஹரியானா மாநிலம் பரீதாபாத் அருகில் சூரஜ்குந்த் மேளா சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறுகிறது.

இங்கு நேற்று முன்தினம் ராட்சத ராட்டினத்தில் 15 பேர் அமர்ந்து சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ராட்டினம் திடீரென உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஹரியானாவில் ராட்டினம் உடைந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
ஐஎஸ்ஐ தொடர்பு குறித்து காங். எம்.பி. கவுரவ் கோகோயிடம் விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in