பிரதமர் மோடி கடின உழைப்பாளி: காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா புகழாரம்

பிரதமர் மோடி கடின உழைப்பாளி: காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா புகழாரம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: பிரதமர் மோடி மிகவும் அன்​பானவர், கடின உழைப்பாளி என இந்​திய வெளி​நாடு வாழ் காங்​கிரஸ் தலை​வர் சாம் பிட்ரோடா புகழாரம் சூட்​டியுள்​ளார்.

காங்​கிரஸ் நாடாளு​மன்​றக் கட்​சித் தலை​வர் சோனியா காந்தி 2018-ல் பிரதமர் மோடியை ‘சிறந்த பேச்​சாளர்’ எனக் குறிப்​பிட்​டது குறித்து, சாம் பிட்​ரோடா செய்தி நிறு​வனம் ஒன்​றுக்கு அளித்த பேட்​டி​யில் கூறியதாவது:

சோனியா கூறியது போல பிரதமர் நரேந்​திர மோடி ஒரு சிறந்த பேச்​சாளர். தனிப்​பட்ட முறை​யில் மிகவும் அன்​பானவர், கருணை​யானவர் மற்​றும் அக்​கறையுள்​ளவர். அவருடன் எனக்கு கொள்கை ரீதி​யான வேறு​பாடுகள் உள்​ளனவே தவிர, தனிப்​பட்ட முறை​யில் எந்​தப் பிரச்​சினையும் இல்லை.

அவர் (பிரதமர் மோடி) எனது குஜராத்தி நண்​பர். நான் குஜராத்​தில் உள்ள அவரது வீட்​டிற்​குப் பலமுறை சென்​றுள்​ளேன். உல​கம் குறித்த அவரது பார்​வை​யிலும், அவரது சித்​தாந்​தத்​திலும் எனக்கு மாற்​றுக் கருத்​துகள் இருக்​கலாம். ஆனால் அது தனிநபருக்கு எதிரானது அல்ல; சித்​தாந்​தத்​திற்கு எதிரானது. இரண்​டும் வெவ்​வேறானவை என்ற புரிதல் வேண்​டும்.

அரசி​யல் ரீதி​யாக மோடியுடன் என்​னால் மாறு​பட முடியும்; அதேநேரம் அவருடன் அமர்ந்து இரவு உணவு அருந்தி, சிரித்​துப் பேசவும் என்​னால் முடியும். எனவே எனக்கு எந்​தப் பிரச்​சினையும் இல்லை. இவ்​வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிட்​ரோடாவின் கருத்​துகளுக்​குப் பதிலளிக்​கும் வித​மாக, “சாம்பாய் மற்​றும் அவரது மனைவி அஞ்​சனா பென் ஆகிய இருவருக்​கும் இனிய தீபாவளி மற்​றும் புத்​தாண்டு நல்வாழ்த்துகள். வரப்​போகும் ஆண்டு மகிழ்ச்​சி​யும் ஆரோக்கியமும் நிறைந்​த​தாக அமைய வேண்​டு​கிறேன். ஜெய் ஜெகன்னாதா" என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி கடின உழைப்பாளி: காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா புகழாரம்
மதுரை நகைக்கடையில் துணிகரம்: ரூ.50 கோடி மதிப்பிலான 30 கிலோ நகைகள் கொள்ளை - நடந்தது என்ன?

X