வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் சேவை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் சேவை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

கொல்கத்தா: படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார்.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் நாட்​டில் முதல்​முறை​யாக வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில் சேவை தொடங்​கப்​பட்​டது. தற்​போது நாடு முழு​வதும் 150-க்​கும் மேற்​பட்ட வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்த சொகுசு ரயில்​களில் இருக்கை வசதி​கள் மட்​டுமே உள்​ளன.

இந்த சூழலில் மேற்​கு​வங்​கத்​தின் மால்டா ரயில் நிலை​யத்​தில் நேற்று நடை​பெற்ற விழா​வில் படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்​தார். இந்த ரயில் மேற்​கு​வங்​கத்​தின் ஹவு​ரா, அசாமின் குவாஹாட்டி நகரங்​களுக்கு இடையே இயக்​கப்பட உள்​ளது.

4 அம்​ரித் ரயில்​கள்: மேற்​கு​வங்​கத்​தின் நியூ ஜல்​பைகுரி- திருச்​சி, நியூ ஜல்​பைகுரி- நாகர்​கோ​வில், மேற்​கு​வங்​கத்​தின் அலிபுர்​து​வார்- பெங்​களூரு, அலிபுர்​து​வார்- மும்பை ஆகிய நகரங்​களுக்கு இடையே 4 அம்​ரித் ரயில் சேவை​களை​யும் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறிய​தாவது: நாட்​டில் முதல்​முறை​யாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அறி​முகம் செய்​யப்​பட்டு உள்​ளது. இந்த ரயி​லின் புகைப்​படங்​கள், வீடியோக்​கள் வெளி​நாடு​களில் அதி​க​மாக பரவி வரு​கின்றன.

ரயில்வே துறை​யில் தன்​னிறைவை பெற்​றுள்​ளோம். அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​களை​விட இந்​தி​யா​வில் அதிக ரயில் இன்​ஜின்​கள் தயாரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. நமது நாட்​டில் தயாரிக்​கப்​படும் ரயில் பெட்​டிகள், மெட்ரோ ரயில் பெட்​டிகள் சர்​வ​தேச தரத்​தில் உள்​ளன. இந்​தி​யா​வில் இருந்து பல்​வேறு நாடு​களுக்கு ரயில் பெட்​டிகள் ஏற்​றுமதி செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

மேற்​கு​வங்​கத்​தில் இருந்து புதி​தாக 4 அம்​ரித் ரயில் சேவை​களும் தொடங்​கப்​பட்டு உள்​ளன. இதன்​மூலம் மேற்​கு​வங்​கம், தமிழ்​நாடு, கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா உட்பட பல்​வேறு மாநிலங்​களை சேர்ந்த மக்​கள் பலன் அடை​வார்​கள். குறிப்​பாக புனித பயணம் மேற்​கொள்​வோர், தொழிலா​ளர்​கள், பொது​மக்​களின் பயணம் எளி​தாகும்.

மேற்​கு​வங்​கத்​தில் ஆட்சி நடத்​தும் திரிண​மூல் காங்​கிரஸ் ஊழலில் திளைத்து வரு​கிறது. வாக்கு வங்கி அரசி​யலில் ஈடு​பட்டு வரு​கிறது. திரிண​மூல் ஆட்​சி​யில் மேற்​கு​வங்​கம் முழு​வதும் வன்​முறை சம்​பவங்​கள் நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கின்​றன. மத்திய அரசின் ஆயுஷ்​மான் பாரத் மருத்​துவ காப்​பீடு திட்​டத்​தை திரிணமூல் அரசு முடக்கி உள்ளது.

மேற்​கு​வங்​கத்​தில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் ஊடுருவி வரு​கின்​றனர். வாக்கு வங்கி அரசி​யலுக்​காக அவர்​களுக்கு திரிண​மூல் காங்​கிரஸ் ஆதரவு அளித்து வரு​கிறது. வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக​வுக்கு ஆதர​வாக மக்​கள் வாக்​களிக்க வேண்​டு​கிறேன். மேற்​கு​வங்​கத்​தில் பாஜக ஆட்சி அமைத்​தால் ஊடுரு​வல்​காரர்​கள் மாநிலத்​தில் இருந்து வெளி​யேற்​றப்​படு​வார்​கள். இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசினார்.

வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் சேவை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
முதல்தர கிரிக்கெட் போட்டியில் 232 வருட சாதனை முறியடிப்பு @ பாகிஸ்தான்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in