பிரதமர் மோடிக்கு சுவீடன், நார்வேயின் உயரிய விருது

பிரதமர் மோடிக்கு சுவீடன், நார்வேயின் உயரிய விருது
Updated on
1 min read

ஸ்டாக்ஹோம்/ஓஸ்லோ: பிரதமர் நரேந்​திர மோடிக்கு சுவீடன், நார்வே நாடு​களின் உயரிய விருதுகள் வழங்​கப்​பட்டு உள்​ளன.

கடந்த 17-ம் தேதி பிரதமர் மோடி சுவீடன் நாட்​டுக்கு சென்​றார். அந்த நாட்​டின் கோதன்​பர்க் நகரில் நடை​பெற்ற விழா​வில் பட்டத்து இளவரசி விக்​டோரி​யாவை அவர் சந்​தித்​துப் பேசி​னார். அப்போது அவருக்கு சுவீடனின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'ராயல் ஆர்​டர் ஆப் தி போலார் ஸ்டார், டிகிரி கமாண்​டர் கிராண்ட் கிராஸ்' வழங்​கப்​பட்​டது. பட்​டத்து இளவரசி விக்டோரியா விருதை வழங்கி கவுர​வித்​தார்.

கடந்த 18-ம் நூற்​றாண்​டில் இந்த விருது தோற்​று​விக்​கப்​பட்​டது. வெளி​நாட்டு தலை​வர்​களின் சிறந்த பொதுச்​சேவைக்​காக​வும், சுவீடன் உடனான உறவை வலுப்​படுத்​து​வ​தில் அவர்​கள் ஆற்​றிய பங்​களிப்​பிற்​காக​வும் இவ்​விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்த விருதைப் பெற்ற முதல் ஆசி​யத் தலை​வர் என்ற பெரு​மையை பிரதமர் நரேந்​திர மோடி பெற்​றிருக்​கிறார். அவர் கூறும்​போது, ‘‘பட்​டத்து இளவரசி விக்​டோரி​யா​வுக்​கும் சுவீடன் மக்​களுக்​கும் நன்​றி. இந்த விருதை 140 கோடி இந்​திய மக்​களுக்​கும், இந்​தியா – சுவீடன் நாடு​களுக்கு இடையே​யான நீண்ட கால நட்​புக்​கும் அர்ப்பணிக்​கிறேன்.

இரு நாடு​களுக்கு இடையே உள்ள வரலாற்று மற்​றும் கலாச்​சா​ரப் பிணைப்பை விருது உறு​திப்​படுத்​துகிறது. இரு நாட்டு மக்களிடையே நீடிக்​கும் அன்​புக்​கும் சான்​றாக அமைந்​துள்​ளது’’ என்று தெரி​வித்​தார்.சுவீடன் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்​திர மோடி நேற்று நார்வே தலைநகர் ஓஸ்லோ சென்​றார். அங்கு அந்த நாட்டு மன்​னர் ஐந்​தாம் ஹரால்டை அவர் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது நார்வே நாட்​டின் மிக உயரிய ‘‘ராயல் நார்​வேஜியன் ஆர்​டர் ஆஃப் மெரிட்​டின் கிராண்ட் கிராஸ்’’ விருதை பிரதமர் மோடிக்கு மன்​னர் ஹரால்டு வழங்​கி​னார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் வெளியிட்ட பதி​வில், “இந்த விருதைப் பெறு​வ​தில் மிகுந்த பெருமிதம் கொள்​கிறேன். இதை இந்​திய மக்​களுக்கு அர்ப்​பணிக்கிறேன். இந்​தி​யா, நார்வே இடையி​லான நட்​புறவுக்கு விருது சான்​றாக விளங்​கு​கிறது. உலக நாடு​களின் முன்னேற்றத்துக்​காக இரு நாடு​களும் ஒன்​றிணைந்து செயல்படுகின்​றன. இந்த அர்ப்​பணிப்பு உணர்​வை​யும் விருது பிரதிபலிக்​கிறது’’ என்றார்.

அமெரிக்​கா, ரஷ்​யா, ஐரோப்​பிய நாடு​கள், வளை​குடா நாடு​கள் உட்பட உலகின் பல்​வேறு நாடு​கள் பிரதமர் நரேந்​திர மோடிக்கு உயரிய விருதுகளை வழங்கி உள்​ளன. நார்வே வழங்​கிய விருதையும் சேர்த்து அவர்​ இது​வரை 32 சர்​வ​தேச விருதுகளைப்​ பெற்​றுள்​ளார்​.

பிரதமர் மோடிக்கு சுவீடன், நார்வேயின் உயரிய விருது
‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ முறையால் மதிப்பெண் குறைகிறதா? - சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பும் பின்புலமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in