

டெல் அவிவ்: பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இஸ்ரேல் சென்றார். முதல் நாளில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது இஸ்ரேல் அரசின் உயரிய விருதான நெசெட் பதக்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இஸ்ரேல் அரசுக்கும் யூத மக்களுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய தனி நபர்களுக்கு நெசெட் பதக்கம் வழங்கப்படுகிறது. இதன்படி இஸ்ரேல், இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நெசெட் வழங்கப்பட்டது.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்த மரியாதை தனிநபருக்கு அளிக்கப்படும் மரியாதை கிடையாது. இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நீடித்த நட்புக்கு அளிக்கப்படும் மரியாதை ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.