சமுத்ர பிரதாப் கப்பல் சுய சார்பை வலுப்படுத்தும்: பிரதமர் மோடி கருத்து

சமுத்ர பிரதாப் கப்பல் சுய சார்பை வலுப்படுத்தும்: பிரதமர் மோடி கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: ‘ச​முத்ர பிர​தாப்’ கப்​பல் நாட்​டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது, நமது சுய​சார்பு பார்​வையை வலுப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரி​வித்​து உள்​ளார்.

இந்​தி​யக் கடலோர காவல் படை​யின் ஐ.சி.ஜி.எஸ். சமுத்ர பிர​தாப் என்ற கப்​பலை பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கடந்த 5-ம் தேதி நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார். இது இந்​தி​யா​வின் முதல், உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​பட்ட மாசு கட்​டுப்​பாட்டு கப்பல் ஆகும்.

இதுகுறித்து பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இந்​தி​யக் கடலோர காவல் படை​யின் ‘சமுத்ர பிர​தாப்’ கப்​பல் சேவை​யில் இணைக்​கப்​பட்​டது பல காரணங்​களுக்​காகக் குறிப்​பிடத்​தக்​கது. இது நமது சுய ​சார்பு பார்​வையை வலுப்படுத்து​வதுடன், நமது பாது​காப்பு கட்​டமைப்பை மேம்படுத்து கிறது. மேலும், சுற்​றுச்​சூழலைப் பேணுவ​தில் நமது உறு​திப்​​பாட்​டை இது பிர​திபலிக்​கிறது” என கூறப்​பட்​டுள்​ளது.

சமுத்ர பிரதாப் கப்பல் சுய சார்பை வலுப்படுத்தும்: பிரதமர் மோடி கருத்து
பர்தா அணிந்து முகத்தை மூடி கடைக்கு வர தடை: திருட்டை தடுக்க பிஹார் தங்க நகை வியாபாரிகள் நடவடிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in