டெல்லி வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்து!

மரபுகளை உடைத்து விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்பு
டெல்லி வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்து!
Updated on
3 min read

புதுடெல்லி: இரு நாட்​கள் அரசு முறை பயண​மாக டெல்லி வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்​திர மோடி விமான நிலை​யத்​தில் நேரில் வரவேற்​றார். அதிபர் புதினுக்கு நேற்றிரவு அவர் சிறப்பு விருந்து அளித்​தார்.

இரு தலை​வர்​களும் இன்று பேச்​சு​வார்த்தை நடத்​துகின்​றனர். அப்போது இரு நாடு​கள் இடையே 25 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கடந்த 2000-ம் ஆண்​டில் முதலா​வது இந்​திய, ரஷ்ய வரு​டாந்​திர உச்சி மாநாடு டெல்​லி​யில் நடைபெற்​றது. இந்த வரிசை​யில் 22-வது உச்சி மாநாடு கடந்த ஆண்டு ஜூலை​யில் ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் நடைபெற்றது.

இதன்​ தொடர்ச்​சி​யாக 23-வது இந்​திய, ரஷ்ய உச்சி மாநாடு டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரு நாட்​கள் அரசு முறை பயண​மாக நேற்று மாலை 6.35 மணிக்கு டெல்​லிக்கு வந்​தார். டெல்லி பாலம் விமான நிலை​யத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி அவரை நேரில் வரவேற்றார். ஆரத் தழுவி வாழ்த்​துகளை பரி​மாறிக் கொண்​டார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்​திர மோடி சார்​பில் அதிபர் புதினுக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்​கப்​பட்​டது. அப்​போது இரு தலை​வர்​களும் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதன்​பிறகு டெல்லி ஐடிசி மவுரியா ஓட்​டலில் அதிபர் புதின் நேற்​றிரவு தங்கினார்.

குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் இன்று காலை 11 மணிக்கு அவருக்கு ராணுவ அணி வகுப்​புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்​கப்​படு​கிறது. இதன்​பிறகு மகாத்மா காந்தி நினை​விடத்​தில் அதிபர் புதின் அஞ்​சலி செலுத்​துகிறார்.

இதன்​ பிறகு டெல்​லி​யில் உள்ள ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யும் அதிபர் புதினும் அதி​காரப்​பூர்​வ​மாக பேச்சுவார்த்தை நடத்த உள்​ளனர். அப்​போது பாது​காப்​பு, அணு சக்தி, தொழில்​நுட்​பம், வர்த்​தகம், விண்​வெளி உள்​ளிட்ட துறை​கள் தொடர்​பாக இரு நாடு​கள் இடையே 25 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

குறிப்பாக, ரஷ்​யா​வின் ஐந்​தாம் தலை​முறை போர் விமான​மான சுகோய் எஸ்​யு57 போர் விமானங்​களை வாங்​கு​வது தொடர்​பாக இந்​தி​யா, ரஷ்யா இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதன்​படி ரஷ்​யா​விடம் இருந்து 54 சுகோய் எஸ்யு போர் விமானங்​கள் வாங்​கப்​படலாம்​.

சென்​னை - விளாடிவோஸ்​டாக் தடம்:இந்​தி​யா​வின் சென்னை மற்​றும் ரஷ்​யா​வின் விளாடிவோஸ்​டாக் நகரங்​களுக்கு இடையே புதிய கடல் வழித்​தடத்தை உரு​வாக்க திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. இதே​போல ஈரானின் சபஹார் துறை​முகம் வழியி​லான வடக்​கு - தெற்கு வழித்​தடத்தை (ஐஎன்​எஸ்​சிடி) உரு​வாக்​கு​வது தொடர்பாகவும் பிரதமர் மோடி, அதிபர் புதின் முக்​கிய பேச்சுவார்த்தை நடத்த உள்​ளனர்.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ் நேற்று கூறும்​போது, “சென்​னை - விளாடிவோஸ்​டாக் தடம், ஐஎன்​எஸ்​சிடி வழித்​தடம், சுகோய் எஸ்யு 57 போர் விமானம் ஆகியவை குறித்து பிரதமர் மோடி, அதிபர் புதின் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​து​வார்​கள். உக்​ரைன் போர் குறித்​தும் இரு தலை​வர்​களும் ஆலோ​சனை நடத்​து​வார்​கள்” என்று தெரி​வித்​தார்.

தொழில​திபர்​களு​டன் சந்​திப்பு: இந்​திய, ரஷ்ய உச்சி மாநாட்டின் ஒரு பகு​தி​யாக இரு நாடு​களின் தொழில​திபர்​கள் பங்கேற்​கும் கூட்​டம் டெல்லி பாரத் மண்​டபத்​தில் இன்று பிற்பகலில் நடை​பெறுகிறது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி​யும் அதிபர் விளாடிமிர் புதினும் பங்​கேற்று உரை​யாற்ற உள்​ளனர். இதில் இரு நாடு​களை சேர்ந்த 150-க்​கும் மேற்​பட்ட தொழிலதிபர்கள் பங்​கேற்க உள்​ளனர்.

இந்த கூட்​டத்​துக்​குப் பிறகு இன்று இரவு 7 மணிக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு சார்​பில் அதிபர் புதினுக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்​கப்​படு​கிறது. இதன்​பிறகு இன்று இரவு 9 மணிக்கு அதிபர் புதின் டெல்​லி​யில் இருந்து மாஸ்​கோவுக்கு விமானத்​தில் புறப்​படு​கிறார். சுமார் 30 மணி நேரம் அவர் இந்​தி​யா​வில் தங்கியிருப்​பார் என்று வெளி​யுறவுத் துறை அதி​காரி​கள் தெரிவித்துள்​ளனர்.

பாது​காப்பு அமைச்​சர்​கள் ஆலோ​சனை: இந்​திய, ரஷ்ய உச்சி மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக ரஷ்ய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ஆண்ட்ரி பெலோ​சோவ் நேற்று டெல்லி வந்​தார். மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங்​குடன் அவர் முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். சுகோய் எஸ்​யு 57 ரக போர் விமான தொழில்​நுட்​பத்தை இந்​தி​யா​வுக்கு வழங்​கு​வது தொடர்​பாக இரு அமைச்​சர்​களும் பேச்​சு​வார்த்தை நடத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது.

ரஷ்ய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ஆண்ட்ரி உட்பட 7 ரஷ்ய அமைச்​சர்​கள் இந்​தி​யா​வுக்கு வந்​துள்​ளனர். ரஷ்​யா​வின் மத்​திய வங்​கி​யின் கவர்​னர் எல்​வி​ரா​வும் டெல்​லிக்கு வந்​துள்​ளார். வரும் 2030-ம் ஆண்​டில் இந்​தி​யா, ரஷ்யா இடையி​லான வர்த்​தகத்தை 100 பில்​லியன் டால​ராக அதி​கரிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டுள்ளது.

இதுவரை 7 தலைவர்களுக்கு நேரில் வரவேற்பு: வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது விமான நிலையத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் அவர்களை வரவேற்பது வழக்கம். மிக முக்கிய தலைவர்களை மட்டும் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்பார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்தபோது பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரை பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நயான், கடந்த பிப்ரவரியில் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி ஆகியோர் இந்தியாவுக்கு வந்தபோது பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்பு அளித்தார்.

தற்போது 7-வது உலகத் தலைவராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் மோடி மரபுகளை உடைத்து டெல்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்று உள்ளார்.

டெல்லி வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்து!
இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கவிடாமல் தடுக்கிறது மத்திய அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in