

புதுடெல்லி: ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் நேற்று உகாதி புத்தாண்டை கொண்டாடினர்.
இதேபோல மகாராஷ்டிரா (குடி பட்வா), சிந்து, காஷ்மீர் இந்துக்கள், மணிப்பூரின் மைதேயி மக்கள் நேற்று புத்தாண்டு கொண்டாடினர். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரவர் தாய் மொழிகளில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உகாதி புத்தாண்டு குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “புத்தாண்டில் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் ஆரோக்கியமான உடல் நலத்துடன் மக்கள் வாழ கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.