பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
Updated on
1 min read

தாஷ்கண்ட்: பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான ‘ஒலி டரஜாலி டஸ்ட்லிக்’ விருது வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்​திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயண​மாக நேற்று உஸ்பெகிஸ்​தான் தலைநகர் தாஷ்கண்​டுக்கு சென்​றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடியும், உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்சியோயேவும் அதிபர் மாளிகைக்கு ஒரே காரில் பயணம் செய்தனர்.

தொடர்ந்து பிரதமர் மோடிக்கு தாஷ்கண்டில் உள்ள ஒரு ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் மோடி யாங்கி உஸ்பெகிஸ்தான் பூங்காவிற்குச் சென்று அங்கு அமைந்துள்ள சுதந்திர நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அதிபர் மாளிகையில் இரவு விருந்துடன் கூடிய சந்திப்பு நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உஸ்பெகிஸ்தான் யோகா கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பார்வையிட்டு யோகா குழுவினருடன் கலந்துரையாடினார்.

பின்னர் இன்று மதியம் பிரதமர் மோடியும், உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்சியோயேவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது, பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சோவி​யத் யூனியனில் இருந்து பிரிந்த உஸ்​பெகிஸ்​தான் கடந்த 1991-ம் ஆண்டு தனி நாடாக உதய​மானது. அந்த நாட்​டில் இயற்கை எரி​வா​யு, யுரேனி​யம், தங்​கம் உள்​ளிட்ட இயற்கை வளங்கள் நிறைந்​துள்​ளன.

இந்​தி​யா​வில் இருந்து உஸ்​பெகிஸ்​தானுக்கு மருந்​துகள் மற்​றும் தொழில் துறைக்கு தேவை​யான இயந்​திரங்​கள் அதிக அளவில் ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்​றன. அந்த நாட்​டில் இருந்து உரங்​கள், பழங்​கள் இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. கல்​வி, தகவல் தொழில்​துட்ப துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படு​கின்​றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான ‘ஒலி டரஜாலி டஸ்ட்லிக்’ ‘Oliy Darajali Do'stlik’ விருது வழங்கப்பட்டது.

பிரதமர் உஸ்பெகிஸ்தானுக்கு சென்றது இது 4-வது முறையாகும். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் கிர்கிஸ்தான் நாட்டுக்குச் செல்கிறார்.

பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
தயாராகிறது ராமர் கோயில் ஆவணப் படம்: பிரதமர் மோடியின் பேட்டி, 500 வருட போராட்டம் இடம்பெறுகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in